சுவாரஸ்யமான சில தமிழ் விடுகதைகள் உங்களுக்காக இதோ..!

Advertisement

தமிழ் விடுகதைகள் 

நம் முன்னோர்கள் நமக்கு நிறைய வகையான தகவல்களை கொடுத்து விட்டும் மற்றும் ஒரு சிலவற்றை கற்றுக்கொடுத்து விட்டு சென்று விட்டார்கள். அப்படி இருக்கும் விஷயங்களில் விடுகதையும் ஒன்று. ஆரம்ப காலத்தில் விடுகதைகள் என்றால் மிகவும் பிரபலமாக இருக்கும். ஆனால் இப்போது அது மாதிரி கிடையாது. இந்த காலத்தில் உள்ள பிள்ளைகளுக்கு விடுகதை என்றால் தெரியாமல் கூட இருக்கிறார்கள். ஆகையால் இன்று சிறந்த தமிழ் விடுகதைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

 தமிழ் விடுகதைகள் 10

  1. ஒட்டியவன் ஒருவன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன..?

விடை: கடிதம் 

2. அந்தரத்தில் தொங்குது சொம்பும் தண்ணீரும். அது என்ன..?

விடை: இளநீர்

3. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்..?

விடை: எறும்பு 

4. காலால் தண்ணீர் குடித்து தலையால் முட்டை விடுவான் அவன் யார்..?

விடை: தென்னை மரம் 

5. உடம்பு இல்லாத எனக்கு தலையுடன், பூ உண்டு நான் யார்..?

விடை: நாணயம் 

6. ஏழை படுக்கும் பாய் எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை அது என்ன..?

விடை: பூமி 

7. கண் இல்லாத நான் பார்வை இல்லாதவர்களுக்கு பாதை காட்டுவேன் நான் யார்..?

விடை: கைத்தடி

8. சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர் அது என்ன..?

விடை: தீக்குச்சி 

தொட்டால் மணக்கும் குடித்தால் புளிக்கும் அது என்ன..?

விடை: எலுமிச்சை பழம் 

9.முற்றத்தில் நடப்பாள் மூலையில் கிடப்பாள் அவள் யார்..?

விடை: துடைப்பம் 

10. உரசினால் போதும் உயிர் முடிந்து போகும் அது என்ன..?

விடை: தீக்குச்சி

11. கால் நான்கு நடக்காது கண் ஆயிரம் இமைக்காது அது என்ன..?

விடை: நாற்கட்டில் 

12. உயிர் இல்லாப் பறவை ஊர் விட்டு ஊர் செல்லும் அது என்ன..?

விடை: கடிதம் 

13. தாய் இனிப்பாள், மகள் புளிப்பாள், பேத்தி மணப்பாள் அது என்ன..?

விடை: பால், மோர், நெய் 

14. பறிக்க பறிக்க பெரிதாகும் அது என்ன..?

விடை: குழி 

15. கையும் இல்லை, காலும் இல்லை நான் ஓடிக்கொண்டே இருப்பேன் யார் தெரியுமா..?

விடை: நேரம்

மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்
விடுகதைகள் | Vidukathaigal
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
குழந்தைகளுக்கான விடுகதைகள்
விடுகதை விளையாட்டு விடைகள்
கணக்கு விடுகதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement