தமிழில் விடுகதைகள் கேள்வி பதில் | Vidukathai in Tamil With Answers
vidukathai in Tamil:- விடுகதை என்பது நாட்டுப்புற மக்களின் சிந்தனை திறனுக்கு தக்க சான்றிதழ் ஆகும். விடுகதை என்பது மறைபொருளிலிருந்து பொருள் விளக்கும் முயற்சியே விடுகதை. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். இத்தகைய விடுகதைகளை விரும்பாதவர்கள் எவரும் இருக்க இயலாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விடுகதை மிகவும் பிடிக்கும். விடுகதைக்கு விடை தெரியவில்லை என்றால் அதற்கு விடை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அதிக ஆர்வம் கொள்வோம்.
அந்த வகையில் இந்த பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சில விடுகதைகளை விடையுடன் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை இப்பொழுது படித்தறிய தயாரா..?
Vidukathai in Tamil With Answer Tamil
1. பிடுங்கலாம் நட முடியாது அது என்ன..?
விடை: தலைமுடி
2. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்?
விடை: பந்து
3. யாரும் ஏறமுடியாத மரம், கிளைகள் இல்லாத மரம் அது என்ன?
விடை: வாழை
4. ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய் கடை அது என்ன?
விடை: தேன்கூடு
5. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்..?
விடை: கரும்பு
6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன..?
விடை: பட்டாசு
7. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் அவன் யார்?
விடை: தண்டோரா
அறிவியல் விடுகதைகள் |
8. வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
விடை: ஆமை
9. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
விடை: பூரி
10. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் அவன் யார்?
விடை: மோதிரம்
11.இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
விடை: தேள்
12. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
விடை : தலைமுடி
13. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
விடை : வெங்காயம்
14. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
விடை : கரும்பு
15. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
விடை : விழுது
16. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
விடை : வெண்டைக்காய்
17.எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
விடை : அடுப்புக்கரி
விடுகதைகள் மற்றும் விடைகள் – Vidukathai Tamil With Answer
1. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?
விடை: தராசு
2. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
விடை: வாழைப்பூ
3. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
விடை: விரல்கள்
4. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைப்பது அது என்ன?
விடை: தூக்கம்
5. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
விடை: முட்டை
6. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன?
விடை: வாழைப்பூ
7. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?
விடை: கடிகாரம்
8. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
விடை: எதிரொலி
9. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
விடை: இமை
10. காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
விடை: முள்
விடுகதை வினா விடைகள் | Vidukathai Tamil With Answer
1. அமைதியான பையன் ஆனால் அடிக்காமலேயே அழுவான் அவன் யார்?
விடை: ஐஸ் கட்டி
2. சின்னச் சின்ன அறைகள் உண்டு, இது வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும் சித்திரமும் அல்ல. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. கோட்டையும் அல்ல அது என்ன?
விடை: தேன் கூடு
3. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான்.. ஒருவன் நடப்பான் அவன் யார்?
விடை: கடிகாரம்
4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
விடை: உப்பு
5. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
விடை: குடை
6. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
விடை: மீன் வலை
7. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
விடை: தொலைபேசி
8. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
விடை: அலாரம்
9. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் – நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி
10. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?
விடை: நிலா
Comedy Vidukathai in Tamil With Answer
விடுகதைகள் மற்றும் விடைகள் – vidukathai in tamil with answer
11. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
விடை: மெழுகுவத்தி
12. ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?
விடை: இதயம்
13. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?
விடை: தலை முடி
14. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
விடை: தேங்காய்
15. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?
விடை: இதயம்
16. உங்களுக்கு சொந்தமான ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
விடை: பெயர்
17. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை, கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
விடை: வாழை
18. இவனும் ஒரு பேப்பர் தான் ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன?
விடை: பணம்
19. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
விடை: கொசு
20. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
விடை: தராசு
விடுகதை வினா விடைகள்
21. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
விடை: கண்
22. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
விடை: விக்கல்
23. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?
விடை: செருப்பு
24. உணவு கொடுத்தால் வளரும் நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?
விடை: நெருப்பு
25.நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?
விடை: தென்றல்
26. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?
விடை: வானம்
27. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?
விடை: குளிர்
28. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?
விடை: சூரியன்
29. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
விடை: தொட்டா சுருங்கிச் செடி
30. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?
விடை: பம்பரம்
தமிழ் விடுகதைகள் வினா விடை
31. அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
விடை: நீர்
32. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
விடை: நிலா
33. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
விடை: கத்தரிக்கோல்
34. மூன்றெழுத்து பெயர், முற்றும் வெள்ளை நிறம் அது என்ன?
விடை: பஞ்சு
35. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
விடை: விக்கல்
மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் |
விடுகதைகள் | Vidukathaigal |
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் |
குழந்தைகளுக்கான விடுகதைகள் |
விடுகதை விளையாட்டு விடைகள் |
கணக்கு விடுகதைகள் |
தமிழ் விடுகதைகள் 400 With Answer |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |