Vidukathaigal With Answer in Tamil
நமது முன்னோர்கள் பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்கள். அப்படி நமக்கு கற்றுக் கொடுக்கும் விஷயங்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் விடுகதைகள். முன்னரெல்லாம் விடுகதைகள் என்றால் மிகவும் பிரபலமாக இருக்கும். ஆனால் இப்போது அந்த மாதிரி இல்லை. இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகளுக்கு விடுகதை என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆகையால் இன்றைய பதிவில் சிறந்த தமிழ் விடுகதைகள் பற்றி தெரிந்துக கொள்வோம் வாங்க..!
புதிர் விடுகதைகள்
1.மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வரவே வராது. அது என்ன..?
விடை: வயது
2. தலை உண்டு பூவுண்டு ஆனால் உடம்பு இல்லை. அது என்ன..?
விடை: நாணயம்
3. அறையடி புல்லில் ஏறுவான், இறங்குவான், அவன் யார்..?
விடை: பேன்
4. இளமையில் நீளமாக இருக்கும், வயதானால் சுருங்கி விடும். அது என்ன..?
விடை: மெழுகுவர்த்தி
5. நூறு கிளிக்கு ஒரே வாய். அது என்ன..?
விடை: வாழைப்பூ
6. சேற்றுக்குள்ளேயே வாழ்பவனுக்கு ஆகாசத்தில் நண்பன், அவன் யார்..?
விடை: சூரியன், தாமரை
7. தொட்டுவிட்டால் ஒன்றுமில்லை, அரைத்து விட்டால் சிவந்து விடுவான். அவன் யார்..?
விடை: மருதாணி
8. கிண்ணம் போல பூ பூக்கும், பானை போல காய் காய்க்கும், அது என்ன..?
விடை: பூசணிக்காய்
9. மூவராய் சேர்வார்கள், வண்ணம் தீட்டுவார்கள், அவர்கள் யார்..?
விடை: வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
10. சொன்னதை திரும்ப சொல்லும் பெண்ணுக்கு பச்சை பாவாடை கேக்குதாம், அவள் யார்..?
விடை: பச்சைக்கிளி
11. நெருப்பில் சுட்டவனுக்கு நீண்ட ஆயுள், அது என்ன..?
விடை: செங்கல்
12. முன்னும் பின்னும் செல்வான், ஒற்றை காலிலேயே நிற்பான், அவன் யார்..?
விடை: கதவு
13. இரவில் கண் சிமிட்டுவான், நட்சத்திரமில்லை, அவன் யார்..?
விடை: மின்மினிப்பூச்சி
14. துணைக்கு கூடவே வருவான், ஆனால் பேசமாட்டான், அவன் யார்..?
விடை: நிழல்
15. தலையில் மோதி பல்லை இழந்தவன், அவன் யார்..?
விடை: சீப்பு
மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் |
சுவாரஸ்யமான சில தமிழ் விடுகதைகள் உங்களுக்காக இதோ |
விடுகதைகள் | Vidukathaigal |
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் |
குழந்தைகளுக்கான விடுகதைகள் |
விடுகதை விளையாட்டு விடைகள் |
கணக்கு விடுகதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |