விடுதலை பத்திரம் | Viduthalai Pathiram in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுநலம் பதிவின் வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவல் என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். இருந்தாலும் மறுமுறையும் கூறுகிறேன். சரி உங்களுக்கு விடுதலை பத்திரம் என்றால் என்ன என்று தெரியுமா..? அதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
விடுதலைப் பத்திரம் என்றால் என்ன..?

ஒரு நபருக்கு சொந்தமாக வேண்டிய சொத்தை தனக்கு வேண்டாம் என்று, உரிமையுள்ள உடன் பிறந்த நபருக்கு விட்டுக் கொடுப்பதே விடுதலைப் பத்திரம் என்று சொல்லப்படுகிறது.
உதாரணத்திற்கு குறைந்த அளவுள்ள நிலம் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். ஆனால் அந்த சிறிய நிலத்திற்கு 10 -க்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கின்றனர். அப்போது என்ன செய்வீர்கள். அந்த சொத்தை நீள அகலத்துடன் பிரித்துக் கொள்ள முடியாது.
| செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன.. அதை ரத்து செய்ய முடியுமா |
அப்படியே பிரித்தாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை அல்லவா..! எனவே இது போன்ற நிலையில் தான் மேற்படி சொத்தை பாத்தியப்பட்ட ஒருவருக்கு, அதாவது உரிமையுள்ள ஒருவருக்கு விட்டுக் கொடுப்பதை தான் விடுதலைப் பத்திரம் என்று சொல்கின்றனர்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், சிலர் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ செட்டில் ஆகியிருப்பார்கள். அதனால் அவர்களின் சொத்தை அனுபவிக்க முடியாமல் போகும் பட்சத்தில், அந்த சொத்தை அங்கு அனுபவிக்கும் சகோதரன், சகோதரிக்கு விடுதலைப் பத்திரமாக எழுதிக் கொடுப்பார்கள்.
| உடன்பிறந்தவர்கள் சொத்தை பாகப்பிரிவினை செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை |
விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா..?
பொதுவாக நாம் விடுதலை பத்திரத்தை எழுதி வாங்கிவிட்டால், பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் வராது. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், ஒருமுறை எழுதி கொடுத்த விடுதலை பத்திரத்தை ரத்து செய்யமுடியாது. பதிவு துறையில் பதிவு செய்த பின், விடுதலை பத்திரத்தை ரத்து செய்யும் உரிமை எழுதி கொடுத்தவருக்கு கிடையாது.
மேலும் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தவர் வழக்கு தொடுத்தாலும், அந்த சொத்துக்கள் சொத்தின் உரிமையாளரிடம் தான் போய்சேரும்.
ஆனால் பதிவு செய்யாமல் இருக்கும் பத்திரங்களை எளிதில் ரத்து செய்யமுடியும். அதனால் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போடும் முன் அதை கவனமாக படிக்க வேண்டும்.
| பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..? |
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |










