கிராமம் vs நகரம் இரண்டில் எது சிறந்தது

village or city life which is better in tamil

கிராமம் vs நகரம்

மனிதர்களின் வாழ்க்கையில் வேலைக்காக தங்களின் ஊர்களை விட்டு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு தங்களின் ஊரை விட்டு செல்வதற்கு மனம் இருக்காது. வேலைக்காக செல்ல வேண்டியிருக்கிறது. கிராமத்தில் வசிப்பவர்களிடம் வாழ்வதற்கு சிறந்த இடமாக இருப்பது கிராமமா நகரமா எண்டு கேட்டால் கிராமம் என்று தான் கூறுவார்கள். அதுவே நகரத்தில் வசிப்பவர்களிடம் கேட்டால் நகரம் தான் சிறந்தது என்று சொல்வார்கள். அதனால் தான் இந்த பதிவில் கிராமம் vs நகரம் இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கிராமம்:

கிராமம் என்பது சிறியதாகவும், மக்கள் தொகை குறைவாகவும் காணப்படும். குறைந்த மக்களே காணப்படுவார்கள். இயற்கை நிறைந்த இடமாக இருக்கும்.

இங்குள்ள மக்கள் மற்றவர்களை பற்றி அறிந்து கொள்வார்கள். அது போல தனது ஊரில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வார்கள். ஊரே அமைதியாக காணப்படும்.

கிராமத்தில் வசதிகள் குறைவாக இருக்கும். அதவாது பள்ளி, மருத்துவமனை, வங்கி, மல்லிகை கடை போன்றவை இருக்காது. ஏதவாது வாங்க வேண்டும் என்றால் நகரத்திற்கு தான் செல்ல வேண்டியிருக்கிறது.

கிராமத்தில உள்ள பெரும்பாலானவர்கள் விவசாயம், மீன் பிடி தொழில் அல்லது சுயதொழிலை தான் செய்வார்கள்.

தண்ணீருக்கு எந்த பஞ்சமும் இருக்காது.

கிராமங்களில் வாழ்க்கையானது அமைதியாகவும், பாரம்பரியத்தை கடைபிடிப்பார்கள்.

கிராமத்தில் ஏதும் பிரச்சனையாக இருந்தால் நாட்டாண்மை வந்து சரி செய்திடுவார். உடனடியாக பிரச்சனைக்கான தீர்வை காணலாம்.

நகரம்:

நகரங்கள் கிராமங்களை விட பெரியதாகவும்.மக்கள் தொகை அதிகமாகவும் காணப்படுவார்கள்.

நகரங்களில் வசதிகள் அதிகமாக கிடைக்கும். அதாவது பள்ளி, மருத்துவமனை, கடைகள் போன்ற இன்னும் பல வசதிகள் இருக்கிறது. 

நகரங்களில் பல வகையான தொழில்கள் செய்யலாம், தொழில் செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்கிறதே என்று தெரியாது. அதாவது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச மாட்டாங்கள். எப்பொழுதும் நகரம் சத்தமாகவே இருக்கும்.

தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

மேல் கூறப்பட்டுளவையை வைத்து பார்க்கும் வசதி வேண்டுமென்றால் நகரம் சிறந்தது. எனக்கு வசதி வேண்டாம் மன அமைதி தான் வேண்டுமென்றால் கிராமம் தான் சிறந்தது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil