Walking Style Personality in Tamil
உங்களுடைய குணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக ஜோசியம் அல்லது வேறு முறையில் தங்களை பற்றி தெரிந்துகொள்ள நினைப்பார்கள். அப்படி இல்லையென்றால் உங்களுடைய நண்பர்களிடம் உங்களை பற்றி கேட்பீர்கள். அவர்கள் சில நேரங்களில் சொல்வார்கள், சில நேரங்களில் உங்களை திட்டி விடுவார்கள். அதனால் தான் நம் பதிவில் செலவே இல்லாமல் உங்களின் குணங்களை தெரிந்து கொள்ள நிறைய முறைகளில் சொல்லி இருக்கோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நீங்கள் நடக்கும் விதத்தை வைத்து உங்களின் குணங்களை சொல்கிறேன்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
நடக்கும் ஸ்டைலை வைத்து உங்களின் குணங்கள்:
பொதுவாக மூன்று ஸ்டைலில் நடப்பார்கள். அதாவது மெதுவாக நடப்பார்கள், வேகமாக நடப்பார்கள், காலின் அடியை நீளமாக வைத்து நடப்பவர்கள் என்று மூன்று ஸ்டைலில் நடப்பார்கள். இப்படி நடப்பவர்களின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.
மெதுவாக நடப்பவர்கள்:
நீங்கள் மெதுவாக நடக்க கூடியவர்களாக இருந்தால் நம்பிக்கை உணர்வு அதிகமாக இருக்கும். நீங்கள் யாரை பார்த்து அஞ்ச மாட்டிர்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வீர்கள். உங்களுடன் இருப்பவர்களை முன்னேற வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் சொல்வதை மீறி வேறு செயல்கள் செய்தாலோ அல்லது உங்களின் பேச்சை கேட்காமல் இருந்தாலோ உங்களுக்கு பிடிக்காது.
எதிர்காலத்தில் என்ன வேலைக்கு போகப்போறிங்கணு தெரிஞ்சிக்க இதில் ஒன்றை தேர்வு செய்யுங்க
வேகமாக நடப்பவர்கள்:
நீங்கள் வேகமாக நடப்பவர்களாக இருந்தால் புதிய விஷயங்களுக்கு ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பீர்கள். அது போல புதிய ஆட்களிடம் ஈசியாக பழகி விடுவீர்கள். உங்களுடைய இலக்கை சீக்கிரம் அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். நீங்கள் வெளியில் செல்கிறீர்கள் என்றால் வித்தியாசமான நபர்களிடம் உள்ள ஆற்றலை பெற வேண்டும் என்று நினைப்பீர்கள்.
நீண்ட அடிகளை எடுத்து வைப்பவர்கள்:
நீண்ட அடிகள் எடுத்து நடப்பவர்கள் நம்பிக்கையுடன் இருப்பவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. நீங்கள் சும்மா இருக்கவே நினைக்க மாட்டீர்கள். எங்கையாவது வெளியில் செல்ல வேண்டும் என்று நினைப்பீர்கள். சில நேரங்களில் அதிக கோபம் உடையவராக இருப்பீர்கள். எது சரி எது தவறு இன்றி ஆராய்ந்து முடிவெடுக்க கூடியவர்களாக இருப்பீர்கள். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையையும் உங்களி புத்தி கூர்மையால் எளிதாக கையாளுவீர்கள்.
கழுகா, மலையா.. முதலில் என்ன தெரிகிறது.. உங்களை பற்றி நான் கூறுகின்றேன்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |