Water Apple in Tamil
பழங்களில் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்று அனைவருக்கும் தெரிந்தது. அதனால் தான் நம்முடைய தினசரி உணவில் ஏதாவதொரு ஒரு பழத்தை சாப்பிடுகிறோம். எல்லாரும் விரும்பி சாப்பிடுகின்ற பழமாக ஆப்பிள் உள்ளது. இந்த ஆப்பிளில் நீர் ஆப்பிள் கேள்விப்பட்டிருக்கீர்களா.! இல்லை எனக்கு அந்த ஆப்பிளை பற்றி தெரியாது என்றால் இந்த பதவி பார்த்து தெரிந்து கொள்ளவும். ஏனென்றால் இந்த பதிவில் நீர் ஆப்பிள் என்றால் என்ன, அதன் சாகுபடி போன்ற விவரத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Water Apple Meaning in Tamil:
வாட்டர்ஆப்பிள் இனத்தை தமிழில் பன்னீர் ஆப்பிள் என்றும், ஆங்கிலத்தில் ரோஜா என்றும் அழைக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இந்த பழத்தை அதிகமாக சாப்பிடுவார்கள். நம் நாட்டில் குளிர்பிரதேசங்களில் காணப்படுகிறது. இதனை பல பெயர்களில் அழைக்கிறார்கள். தண்ணீர் ஆப்பிள், பன்னீர் பழம், பன்னீர் ஆப்பிள் என் பெயர்களில் அழைப்பார்கள். நம் நாட்டில் இதனை ஜாம் பழம் என்று கூறுகிறார்கள். இந்த பழம் சுவையாக இருக்கும்.
Water Apple in Tamil:
தண்ணீர் ஆப்பிளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் சி மற்றும் ஏ
நியாசின், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் உள்ள நன்மைகள்:
ரோஸ் ஆப்பிளானது சர்க்கரை நோய், புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது. இவற்றை மருத்துவத்திலும் பயன்படுபடுகிறது. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
மலேசியா நாட்டில் திரஸ் சிகிச்சைக்கு பன்னீர் ஆப்பிளின் மரத்தில் உள்ள பட்டையை எடுத்து ஒரு வகை காபி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆப்பிளின் சாறு மூளை மற்றும் கல்லீரல் பிரச்சனை ஏதும் இருந்தால் அவற்றை சரி செய்வதற்கு உதவுகிறது.
பன்னீர் ஆப்பிளின் உள்ள பூக்கள் காய்ச்சலை சரி செய்வதற்கு உதவுகிறது. இதில் உள்ள விதிகள் வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு உதவுகிறது.
கொலம்பியா நாட்டில் உள்ள மக்கள் பன்னீர் ஆப்பிளை உடலில் ஏற்படும் வலிகளை சரி செய்வதற்க்கு பயன்படுத்தினார்கள்.
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு உதவுகிறது. உடலில் உள்ள கோலப்பு குறைவதால் இதய பிரச்சனை வராமல் இருப்பதற்கு உதவுகிறது.
என்னென்ன நிறங்களில் கிடைக்கின்றது:
பன்னீர் ஆப்பிளானது சிவப்பு நிறம், இளம் பச்சை நிறங்களில் கிடைக்கின்றது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |