குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான சுதந்திர தின வரவேற்பு உரை..!

Advertisement

Welcome Speech for Independence Day  

பொதுவாக நாம் தமிழில் கட்டுரை எழுதுவது அல்லது பேச்சு போட்டியில் பேசுவது என எண்ணற்ற விழாக்களில் கலந்து கொள்வோம். இவ்வாறு நாம் கலந்துக் கொள்ளும் பட்சத்தில் அனைத்திற்கும் முதல் முக்கியத்துவமா இருப்பது வரவேற்பு உரை தான். ஏனென்றால் எதற்கும் வரவேற்பு உரை என்பது நல்ல முறையில் அமைந்தால் மட்டுமே மற்ற அனைத்தும் சிறப்பாக இருக்கும். இதனை ஒரு விழாவிலின் தொடக்கப்புள்ளி என்றும் கூறலாம். ஆனால் நம்மில் நிறைய நபருக்கு இந்த வரவேற்பு உரையில் தான் தடுமாற்றம் என்பது இருக்கும். அதனால் இன்று சுதந்திர தின விழாவிற்கான குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான வரவேற்பு உரையினை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுதந்திர தின வரவேற்பு உரை:

அனைவருக்கும் வணக்கம்,

இந்த பெருமிதம் வாய்ந்த சுதந்திர திருநாளன்று அனைவரும் ஒற்றுமையுடன் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டினை பிரிட்டிஷ் அரசு ஆனது அடிமைப்படுத்தி வைத்து இருந்தது.

நம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாடு ஆனது எண்ணற்ற கனிமன வளங்களை உடைய நாடாக செழித்து வந்தது. ஆனால் இத்தகைய வளங்கள் அனைத்தினையும் பிரிட்டிஷ் நாடு முற்றிலும் பரித்து நம்மை அடிமையாக்கியது.

இத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து இந்திய விடுபெற்று சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் இதற்கான முதல் படியினை மஹாத்மா காந்தி அவர்கள் எடுத்து வைத்தார்.

 சுதந்திர தின விழா வரவேற்புரை

மஹாத்மா காந்தியின் தொடர்ச்சியாக காமராஜர், மகாகவி பாரதியார், பகத் சிங், ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் என பல தலைவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக அயராத பல போராட்டங்களை நடத்தி அதன் மூலம் பல இன்னல்களையும் சந்தித்தனர்.

அந்த வகையில் பார்த்தால் ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளின் சுதந்திரம் என்பது அடங்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நம் இந்திய நாட்டிற்கும், நாட்டில் உள்ள மக்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கை முழுவதும் அடையாகிவிடுமோ..? என்று சிந்திக்க ஆரம்பித்தனர் சுதந்திர போராட்ட வீரர்கள்.

பல வகையான போராட்டங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15, 1947- ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணியளவில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அன்று முதல் இன்று வரை ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆனது இந்திய நாட்டில் சுதந்திர தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

தேச பக்தி என்பது இந்திய நாட்டில் உரிமையோடு வாழ்வது மட்டுமின்றி, ஒவ்வொரு இந்தியருக்கும் அனைத்திற்கும் மேலாக இருக்க வேண்டிய ஒரு முக்கியத்துவமான உணர்வு ஆகும். ஆகவே இந்த நன்நாளில் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இத்துடன் எனது வரவேற்பு உரையினை முடித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.

சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement