வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒருவர் திடீரென இறந்துவிட்டால் அவருடைய சொத்து யாருக்கு சொந்தம்.?

Updated On: November 16, 2023 1:34 PM
Follow Us:
What Happens If a Person Dies Without a Will in Tamil
---Advertisement---
Advertisement

What Happens If a Person Dies Without a Will in Tamil

இக்காலத்தில் சொத்து பிரச்சனை தான் அதிகம் காணப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு சண்டை வந்தால் அது சொத்துக்கான சண்டையாக தான் இருக்கும். சொத்து வைத்திருக்கும் நபர் அவர் விரும்பியவருக்கே சொத்தை தரலாம் என்று இந்திய சட்டம் கூறுகிறது. பொதுவாக ஒருவர் இறப்பதற்கு முன் உயில் எழுதி வைத்துமே அதில் அதிக பிரச்சனைகள் ஏற்படும். அப்படி இருக்கும் நிலைமையில் உயில் எழுதாமல் ஒருவர் தீடீரென இறந்து விட்டால் அந்த சொத்து யாருக்கு என்பதில் பெரும் பிரச்சனையே நடக்கும். இறந்தவரின் மனைவிக்கு சொந்தமா.? தாய்க்கு சொந்தமா.? போன்ற பல குழப்பங்கள் இருக்கும். எனவே அதனை விளக்கும் வகையில் இப்பதிவில் ஒருவர் தீடீரென இறந்துவிட்டால் அவருடைய சொத்து யாருக்கு சொந்தம் என்று சட்டம் கூறுகிறது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Who Owns the Property if Someone Dies Suddenly in Tamil:

இன்றைய காலத்தில் மகன் இறந்து விட்டால் அவருடைய சொத்தில் தாய், உரிமை கொள்வதில்லை. இதனால் சிலர் முதியோர் இல்லத்தில் வாழக்கூடிய சூழலும் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு தாயும் தனது மகனின் சொத்தில் உள்ள உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம். எனவே 1956 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி மகனின் சொத்தின் மீதான உரிமை தொடர்பான சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..

இந்திய வாரிசுரிமை சட்டம் 1956 கூறுவது:

ஒருவர் உயில் எழுதாமல் இறந்து விட்டால் அவருடைய சொத்து முதல் வகுப்பு வாரிசுகளான மகன், மகள், மனைவி மற்றும் தாய்க்கு சேர வேண்டும் என்று இந்திய சட்டம் கூறுகிறது.

ஆனால், சில தாய்மார்கள் பல காரணங்களால் தனது சொந்த மகனின் சொத்தில் பங்கு கொள்வதில்லை. மகனின் சொத்தில் தாய்க்கும் உரிமை உள்ளது என்பதை அவர்கள் அறிவதில்லை.

எனவே, ஒருவர் திடீரென இறந்தது விட்டால், அவருடைய சொத்து ஆனது அவருடைய குழந்தைக்கும் மனைவிக்கும் கிடைக்கும் பங்கின் அளவிற்கு அவருடைய தாய்க்கும் கிடைக்க வேண்டும்.

திருமணம் ஆகாதவர் இறந்தால் யாருக்கு சொந்தம்.?

திருமணம் ஆகாத ஒருவரின் பெயரில் சொத்து இருந்து அவர் இறந்துவிட்டால் அவருடைய சொத்து முதல் வாரிசாக கருதப்படும் அவருடைய தாய்க்கு வழங்கப்படும். தாய் உயிருடன் இல்லையென்றால், இரண்டாவது வாரிசான அவருடைய தந்தைக்கு வழங்கப்படும்.

உயில் எழுதுவது எப்படி? | Uyil Eluthuvathu Eppadi

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now