What Is Deposit Loss In Election in Tamil
பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக தேர்தல் டெபாசிட் தொகை இழப்பு என்றால் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இன்று நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் நேரத்தில் அனைவராலும் அதிகம் பேசப்படும் வார்த்தை என்றால் அது டெபாசிட் இழப்பு என்பது தான். அதனால் நாம் அனைவருமே டெபொசிட் இழப்பு என்றால் என்ன என்பதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இப்பதிவின் வாயிலாக டெபாசிட் இழப்பு என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தேர்தல் விதிமுறைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா
டெபாசிட் இழப்பது என்றால் என்ன..?
பொதுவாக டெபாசிட் இழப்பு என்பது ஒருவர் தேர்தலில் போட்டி இட்டால், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தொகை தர வேண்டும். அது தான் டெபாசிட் தொகை என்று சொல்லப்படுகிறது.
இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு 25,000 ரூபாய் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல், இதில் SC மற்றும் ST பிரிவினருக்கு 50% வரை சலுகை வழங்கபடுகிறது.
அதன் பிறகு தேர்தல் நடந்து ஓட்டுகள் எண்ணப்படுகிறது. ஆகவே ஒருவர் தான் வழங்கிய டெபாசிட் தொகை அவருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்றால், 6 -ல் ஒரு ஒட்டு பெற்றிருக்க வேண்டும்.
அதாவது 60,000 செல்லும் ஓட்டுகளில் அவர் 10,000 ஓட்டை பெற்றிருக்க வேண்டும். அப்படி 10,000 ஓட்டை அவர் பெறாவிட்டால், அவர் செலுத்திய டெபாசிட் தொகையை திருப்பி தரமாட்டார்கள்.
தேர்தல் ஆணையத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அந்த தொகை எடுத்து கொள்ளப்படும். அதாவது, மக்கள் ஆதரவு இல்லாமல், வீணாக தேர்தலில் நின்றதற்காக அந்த தொகை எடுத்து கொள்ளப்படும். இதை தான் டெபாசிட் இழப்பு என்று சொல்லப்படுகிறது.
அதுவே ஒரு வேட்பாளர் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கை விட ஒரு ஓட்டாவது அதிகமாக பெற்றால் மட்டுமே, டெபாசிட் தொகை அவருக்கு திருப்பி வழங்கப்படும்.
தேர்தல் மற்றும் வாக்குரிமை பற்றிய முழக்கங்கள்..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |