காந்தி ஜெயந்தி என்றால் என்ன | Gandhi Jayanti 2024 How Many Years in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காந்தி ஜெயந்தி என்றால் என்ன.? என்பதையும் இந்த ஆண்டு எத்தனையாவது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது என்பதையும் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டப்படுகிறது, அன்றைய தினம் அரசு விடுமுறை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், நம்மில் பலபேருக்கும் காந்தி ஜெயந்தி என்றால் என்ன.? என்பது ஒவ்வொரு ஆண்டும் எத்தனையாவது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது என்பது தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
What is Gandhi Jayanti in Tamil:
காந்தி ஜெயந்தி என்பது, தேசத்தந்தையான மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் நினைவாக கொண்டாடப்படும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் விழா ஆகும். மகாத்மா காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டில் அக்டோபர் 02 ஆம் தேதி போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார். எனவே, மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் நாள் தான் காந்தி ஜெயந்தி.
2007 ஆம் ஆண்டில், ஜூன் 15 ஆம் தேதி ஐக்கிய நாடு பொது சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, அக்டோபர் 02, சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்து அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற வழிவகுத்த ‘தேசத்தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களை கெளரவிக்கும் வகையில் இந்நாள் அரசு விடுமுறை அளித்து கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், நாடு முழுவதும் நடத்தப்படும் நினைவு நிகழ்ச்சிகள், பிராத்தனை கூட்டங்களில் மகாத்மா காந்தியின் விடுதலை போராட்ட தியாகங்கள் பற்றி எடுத்துரைத்தும், அவருக்கு மிகவும் பிடித்தமான பஜனை பாடலான ரகுபதி ராகவ ராஜா ராம் பாடலை பாடியும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
Gandhi Jayanti 2024 How Many Years in Tamil:
இந்த ஆண்டு 2024 காந்தியடிகளின் 155 ஆவது பிறந்தநாள் ஆகும். எனவே, இந்த ஆண்டு 155 ஆவது காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை வலி கொள்கைகளை ஊக்குவித்து இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் காந்தியடிகள் தன்னை அர்ப்பணித்து கொண்டார். மகாத்மா காந்தி ஒரு அரசியல் நெறிமுறையாளர், தேசியவாதி மற்றும் வழக்கறிஞர்.
புகழ்பெற்ற வங்காள கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், காந்தியை மகாத்மா காந்தி என்று அழைத்தார். இதனால் அவருக்கு “மகாத்மா” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இப்படி காந்தியடிகளை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அவர் செய்த தியாகங்களும் தொண்டுகளும் அதிகம்.
மகாத்மா காந்தியைப் பற்றிய கட்டுரை
மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் – காந்தியடிகள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |