What to do if ATM machine gets torn notes in tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் அனைவருக்கும் பயன்படும் ஒரு தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது நமது அக்கௌன்டில் உள்ள பணத்தை எடுக்க நாம் வங்கிகளுக்கு செல்வதில்லை. பெரும்பாலானோரு ATM-யில் மிக எளிதாக பணத்தை எடுத்துவிடுகிறோம். அப்படி ATM மெஷினில் பணம் எடுக்கும் போது பணம் கிழிந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்வது? யாரை அணுக வேண்டும்? எவ்வாறு மாற்றுவது? என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுகள்.
ATM மெஷினில் கிழிந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்வது? யாரை அணுக வேண்டும்? எவ்வாறு மாற்றுவது?
பொதுவாக ஏடிஎம் மில் 98% கிழிந்த நோட்டுகள் வர வாய்ப்பில்லை, ஒருவேளை அப்படி வருகிறது என்றால் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
நீங்கள் பணம் எடுக்கும்போது கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் ஏடிஎம் செக்யூரிட்டியிடம் காட்டவேண்டும் அல்லது ஏடிஎம் மில் உள்ள CCTV காமிரா முன் போய் நின்று கொண்டு கிழிந்த நோட்டுகள் காமிராவில் தெரியும்படி காட்டவேண்டும்., அத்துடன் பணம் எடுத்த பின் வரும் ரசீதையும் காமிராவில் காட்டவேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?
பின்பு பணம் எடுத்த பின் வரும் ரசீதை ஒரு நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் அதில் பதிவாகியுள்ள எழுத்துக்கள் அழிந்து விடும்
உங்களுக்கு கிழிந்த அல்லது செல்லாத நோட்டுகள் ATM-யில் இன்று வந்தால், எந்த ATM-யில் எடுத்தீர்களோ அந்த வங்கிக்குச் சென்று புகார் அளிக்க வேண்டும்.
இதற்காக நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டியிருக்கும். அதில் நீங்கள் பணம் எடுக்கும்போது வந்த ரசீதையும் இணைக்க வேண்டும். ஒருவேளை ரசீது வராவிட்டால் பணம் எடுத்த நேரம், கணக்கு எண் ATM கிளை போன்ற விவரங்களை வழங்க வேண்டும்.
நீங்கள் இந்தப் புகாரைக் கொடுத்தவுடன் வங்கி தரப்பிலிருந்து பரிசோதனை செய்யப்பட்டு, நீங்கள் வழங்கிய விவரம் சரியாக இருந்தால் நீங்கள் எடுத்த கிழிந்த நோட்டை உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு வேறு நல்ல நோட்டு உங்களுக்கு வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செய்கூலி சேதாரம் என்றால் என்ன..? இது இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |