What to do if you get a Fake Currency note in Tamil
இன்றைய கால கட்டத்தில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு விஷயமாகி விட்டது. அதாவது ஒரு நாட்டின் பணம் என்பது தான் அந்த நாட்டின் பொருளாதார நிலையை நிர்ணயிக்கிறது. அதனால் ஒரு சிலர் பணத்தை சம்பாதிக்க குறுக்கு வழியை கையாளுவார்கள். அதாவது அசல் பணத்திற்கு பதிலாக போலி பணத்தை தயாரித்து வெளியிடுகிறார்கள். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைகிறது. அதனால் அனைவருமே தங்களிடம் உள்ள பணத்தை மிகவும் கவனமாக வைத்து கொள்ள வேண்டும்.
அப்படி நாம் கவனமாக வைத்திருந்தாலும் ஒரு சில நேரத்தில் நமது கவனத்தையும் தாண்டி நம்மிடம் போலி பணம் வரும் வாய்ப்புள்ளது. அப்படி உங்களிடம் போலி பணம் வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா..? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இன்றைய பதிவில் கள்ள நோட்டு உங்க கைக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை கவனமாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்திய நாணயத்தில் இந்த குறியீடு இருக்க காரணம் என்ன தெரியுமா
What to do if you have a Fake Currency Note in Tamil:
முதலில் நமிடம் உள்ள பணம் அசலா போலியா என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் 👇
நல்ல நோட்டு – கள்ள நோட்டு கண்டுபிடிப்பது எப்படி
இப்பொழுது நீங்கள் ATM-ல் பணம் எடுக்கும் பொழுது நீங்கள் ஒரு கள்ள நோட்டை பெற்றீர்கள் என்றால் அந்த நோட்டின் முன் மற்றும் பின்புறம் இரண்டையும் CCTV கேமராவில் காட்டி விட்டு ஏடிஎம்மில் உள்ள பாதுகாவலரிடம் தெரிவித்து விடுங்கள்.
அதே போல் மறக்காமல் உங்கள் ATM பரிவர்த்தனை ரசீதை ATM இயந்திரத்தில் இருந்து எடுத்து கொண்டு அதனை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் எடுத்த போலி நோட்டு மற்றும் பரிவர்த்தனை ரசீதை வங்கியில் கொடுக்க வேண்டும்.
அதன் பின்பு வங்கி அதிகாரிகள் ஒரு படிவத்தை நிரப்புமாறு கூறுவார்கள். இந்த படிவத்த்தை நிரப்புவதால் அதன் அடிப்படையில் தான் நீங்கள் பெற்ற போலி நோட்டுக்குப் பதிலாக அசல் நோட்டைக் பெற முடியும்.
வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ATM-ல் இருந்து போலி நோட்டுகள் வந்தால் வங்கிகள் தனது வாடிக்கையாளருக்கு அசல் பணத்தைத் தர வேண்டும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்த குறியீடு ஏன் இருக்கிறது தெரியுமா
இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனையின் போது போலி ரூபாய் நோட்டைப் பெற்றால் உடனடியாக சம்பந்தப்பட்டவர் கண்முன்னே இருந்தால் உடனே அவரிடம் போலி பணத்தை அளித்து விட்டு அதற்கு பதிலாக அசல் பணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
இப்பொழுது நீங்கள் ஈடுபட்ட தனிப்பட்ட பரிவர்த்தனையின் போது பெற்ற பல போலி நோட்டுகளை பெற்றுள்ளீர்கள் என்றால் அதனை மறைக்க முயற்சிக்காமல் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அல்லது உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிப்பது நல்லது.
ஏனென்றால் நீங்கள் கொடுக்கும் புகார் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டவர்களை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். மேலும் IPC பிரிவு 489 C-ன் கீழ் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது தண்டனைக்குரியது.
குற்றம் செய்தவர்களுக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்திய ரூபாய் நோட்டுகளில் எத்தனை மொழிகள் இருக்கிறது தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |