வெள்ளி நகை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

what to see buying silver in tamil

வெள்ளி வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை 

வணக்கம் நண்பர்களே இன்றைய  பதிவில் எல்லோருக்கும் ஒரு பயனுள்ள தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகின்றோம். அதாவது வெள்ளி நகைகளை வாங்கும் பொழுது எப்படி சரியான முறையில் வாங்குவது என்று தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். வெள்ளி ஆபரண நகைகளானது கி.மு 3500 ஆம் ஆண்டு வெள்ளியை பயன்படுத்தி ஆபரணங்களாக செய்யப்பட்டுள்ளன. நகைகள் மட்டுமின்றி வீட்டில் பூஜைகளுக்கு தேவைப்படும் பொருட்களும் அதிகமாக பயன்பாட்டிற்கு  வந்தன. ஆனால் தற்போழுது இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதினால் மக்கள் வெள்ளி நகைகளை வாங்குவதற்கு திரும்புகின்றன. மேலும் வெள்ளி நகைகளை எப்படி வாங்குவது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தங்கம் வாங்க போகிறீர்களா..! அப்போ இதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்

வெள்ளி வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை:

முதலில் நீங்கள் எந்தவிதமான நகைகளை வாங்குவதற்கும் முன்பு அன்றைய வெள்ளியின் விலை எவ்வளவு என்று தெரிந்துகொள்வது அவசியம், மேலும் வெள்ளியின் எடை மற்றும்  அதற்கான செய்கூலி, சேதாரம் எவ்வளவு  சதவீதம் போடப்படுகிறது என்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். நீங்கள் வாங்கிய வெள்ளி நகைகளுக்கான கட்டணத்தை செய்கூலி, ஹால்மார்க் கட்டணம், ஜிஎஸ்டி வரி போன்றவற்றை பார்த்து வாங்க வேண்டும்.

வெள்ளி நகைகளை வாங்கும் முறை:

பொதுவாக நாம் வெள்ளி நகைகளை வாங்கும் பொழுது, ஒரு சில கடைகளில் கட்டணம் தனியாகவும், செய்கூலி தனியாகவும் வசூல் செய்வார்கள்.  இன்னும் ஒரு சில கடைகளில் வெள்ளி கிராம் விலையுடன் கட்டணத்தை சேர்த்து வசூலிப்பார்கள். இது போன்ற முறைகளில் கட்டணத்தை வசூலிக்கும் பொழுது வெள்ளி நகைகளுக்கான ரசீதை பெறுவது மிகவும் அவசியம்.

நீங்கள் வெள்ளி கொலுசுகளை வாங்கும் பொழுது அதில் சில அழகான கல்கள்  பதிக்கப்பட்டிருக்கும். கல் பதிக்கப்பட்டிருக்கும் எந்த நகைகளுக்கும் தனியான மதிப்புகள் கிடையாது. எனவே கல் பதிக்கப்பட்டிருக்கும் நகைகளுக்கு தனியாக மதிப்பு குறிப்பிட்டுள்ளார்களா என்று கவனிப்பது அவசியம். மேலும் அந்த கல்லுக்கு சேர்த்து வெள்ளியின் எடை இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு உடல் வெப்பத்தினால் வெள்ளி நகைகள் வாங்கிய இரண்டு நாட்களில் கருத்துவிடும், எனவே இதுபோல் கருத்து போகாமல் இருப்பதற்காக வெள்ளியில் ரேடியம் என்னும் உலோகத்தை கலக்கிறார்கள், இது போன்ற நகைகள் வேண்டும் என்றால் வெள்ளி வியாபாரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இனிமேல் நகை வாங்கும் பொழுது இது போன்ற விஷயங்களை கவனித்து நகை வாங்குங்கள் நண்பர்களே…

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil