காட்டன் புடைவையை எங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது..

Advertisement

காட்டன் புடைவையை எங்கு குறைந்த விலையில் வாங்கலாம்

பெண்களுக்கு புடவை என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்த புடைவைகளில் பல வகைகள் இருக்கிறது. அதாவது காட்டன் புடவை, சில்க் காட்டன், பூனம் புடவை, பட்டு புடவை என்று பல வகைகள் இருக்கிறது. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான புடவைகளை விரும்புவார்கள். அதில் பலருக்கும் காட்டன் புடவை என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

நீங்க புடவை எடுக்க போகிறீர்கள் என்றால் உடனே எல்லாம் வாங்கிட மாட்டாங்க. எந்த கடையில் தரமாக உள்ளது, கலர் மற்றும் விலை போன்றவற்றை பார்த்து தான் வாங்குவோம். பட்டு புடைவைக்கு பெயர் போன ஊர் என்றால் காஞ்சிபுரம் மற்றும் திருபுவனம் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் காட்டன் புடைவையை எங்கு குறைந்த விலையில் வாங்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

வடமணப்பாக்கம் காஞ்சிக் காட்டன் சேலை:

காஞ்சிபுரத்திலிருந்து அய்யங்கார் குளம் வழியாக சின்ன கிராமமாக வடமணப்பாக்கம் இருக்கிறது. நூலின் மென்மை, வடிவமைப்பு, பார்டர் டிசைன் போன்றவை வித்தியசமாக தான் இருக்கும். இந்தப் காட்டன் புடவையானது உடம்பில் இருக்கின்ற அளவிற்கு தெரியாத அளவிற்கு மென்மையாக இருக்கும்.

கோவிலூர் கட்டாரிக்கண்ணி:

கோவிலூர் கட்டாரிக்கண்ணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவிலூரில் நெய்யப்படும்  இந்த சேலையானது ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலையை போலவே இருக்கும். பார்டர் மட்டுமின்றி சேலையின் முந்தானையும் டிசைனாக இருக்கும், இதனின் விலை தோராயமாக 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோடாலிக்கருப்பூர் அடர்நிற காட்டன் சேலை:

கும்பகோணம் – அரியலூர் சாலையில் அணைக்கரையை ஒட்டியுள்ள சிறிய கிரமமாக கோடாலிக்கருப்பூரின் நெசவுத்தொழில் ஆனது ஒரு காலத்தில் ஓகோன்னு இருந்தது. இதில் நெய்யப்படும் புடைவையானது பஞ்சு போல மென்மையாக இருக்கும். இந்த புடவையில் இருக்கும் டிசைன்கள் தனித்துவமாக இருக்கும். இவை 450 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களை எங்கு குறைவாக வாங்கலாம்

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் காட்டன் புடவைகள் குறைவான விலையில் கிடைக்கிறது. எல்லா விதமான காட்டன் புடைவைகளும் குறைந்த விலையில் இருக்கிறது.

ஆன்லைன் ஸ்டோர்:

உங்களால் மேல் கூறியுள்ள ஊர்களில் சென்று வாங்க முடியவில்லை என்றால் ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கி கொள்ளலாம். இதில் குறைந்த விலையில் 200 ரூபாய் முதலிருந்து கிடைக்கிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் ஸ்டோர்களில் இருக்கும் ஆபர்களை விளம்பர படுத்துகிறார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக  ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Today Useful Information In Tamil

 

Advertisement