Which Brick is Best Red or Fly Ash Bricks
இக்காலத்தில் வீடு கட்டுவது தான் பலபேரின் கனவாக இருக்கிறது. ஆனால், இக்காலத்தில் வீடு கட்ட அதிக அளவில் பணம் தேவைப்படும் என்பதால் வீடு கட்டுவது என்பது எளிமையாக காரியம் இல்லை. அதற்காக பல முறைகளை நாம் கையாள வேண்டும். அதில் முதலாவதாக இருப்பது பணம். அதற்கு அடுத்தாக இருப்பது வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் தான். காலத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு பொருட்களின் விலையும் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் செங்கல், ஜல்லி , கம்பி மற்றும் சிமெண்ட் போன்ற பொருட்களை வாங்குவதற்கு பணம் அதிகமாக செலவாகிறது. இப்படி வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் ஒருபுறம் இருந்தாலும், பொருட்களின் தரத்தை பார்த்து வீடு கட்டுவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
எனவே, அந்த வகையில் இப்பதிவில் வீடு கட்டுவதற்கு முக்கிய பொருளாக இருக்கும் செங்கல் வகைகளில் எது சிறந்தது.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. அதாவது, வீடு கட்டுவதற்கு சிகப்பு செங்கல் நல்லதா.? சாம்பல் நிற செங்கல் சிறந்ததா.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்த்து கொள்ளலாம் வாங்க.
சிகப்பு செங்கல் என்றால் என்ன.?
சிகப்பு செங்கல் ஆனது, களிமண் செங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, இது இயற்கை களிமண்ணால் செய்யப்பட்ட செவ்வக வடிவ செங்கல் ஆகும். இது களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுடப்பட்டு தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது பழமையான மற்றும் மிகவும் பாரம்பரியமான கல்லாகவும் உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிளாட் வாங்குவது Vs வீடு வாங்குவது..! இது இரண்டில் எது சிறந்தது தெரியுமா
சாம்பல் செங்கற்கள் என்றால் என்ன.?
சாம்பல் செங்கற்கள் ஆனது, ஃப்ளை ஆஷ் சிமெண்ட், தண்ணீர் மற்றும் பிற பொருட்களுடன் கலந்து அச்சுகளில் ஊற்றப்பட்டு அதிக வெப்பநிலையில் சுடப்பட்டு உருவாக்கப்படுகிறது. அதாவது, நிலக்கரியில் இயங்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் துணை தயாரிப்பான ஃப்ளை ஆஷ் போன்ற தொழிற்சாலை கழிவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
Fly Ash Bricks VS Red Bricks Tamil:
தரம் | Fly Ash Bricks (சாம்பல் நிற செங்கற்கள்) | Red Bricks (சிவப்பு செங்கல்) |
அடர்த்தி | சிவப்பு செங்கற்களுடன் ஒப்பிடும்போது ஃப்ளை ஆஷ் செங்கல்கள் எடை குறைந்தவை | சிவப்பு செங்கற்கள் கனமாகவும் அடர்த்தியாகவும் உள்ளது. அதிக அதிக அடர்த்தி உடைவை. |
வலிமை | ஃப்ளை ஆஷ் செங்கல்கள் சிவப்பு செங்கற்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அழுத்த வலிமையைக் கொண்டுள்ளன. | சிவப்பு செங்கற்கள் அதிக வலிமையானது மற்றும் அதிக சுமைகளை தாங்கக்கூடியது. |
எடை | சாம்பல் செங்கற்கள் சிவப்பு செங்கற்களை விட ஒப்பீட்டளவில் லேசான எடை உடையவை. | சிகப்பு செங்கல்கள் அதிக எடை உடையவை. |
நீர் உறிஞ்சும் தன்மை | சிவப்பு செங்கற்களுடன் ஒப்பிடுகையில், சாம்பல் நிற செங்கற்கள் அதிக நீர் உறிஞ்சும் தன்மை உடையது. | சிகப்பு நிற செங்கல்கள் குறைந்த நீர் உறிஞ்சுதல் தன்மையை உடையது. |
மேற்பரப்பு | ப்ளை ஆஷ் செங்கற்கள் ஒரு மென்மையான மேற்பரப்பை கொண்டிருக்கும். | சிவப்பு செங்கற்கள் மென்மையான மேற்பரப்பை கொண்டிருக்காது. |
வெப்பம் உள்ளிட்டவற்றை காக்கும் திறன் | சாம்பல் செங்கற்கள் குறைந்த வெப்ப காப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன. | சிகப்பு செங்கற்கள் வெப்ப காப்பு பண்புகளை தக்கவைத்து கொள்ளும். எல்லா சூழ்நிலைக்கும் இந்த செங்கல் சிறந்தது. |
விலை | சிகப்பு செங்கற்களை ஒப்பிடுகையில் சாம்பல் நிற செங்கற்கள் விலை குறைவு. | சாம்பல் நிற செங்கற்களை ஒப்பிடுகையில் சிகப்பு செங்கற்களின் விலை அதிகம். |
மேலே கூறப்பட்டுள்ள விவரங்களின் படி பார்த்தல், Fly Ash Bricks மற்றும் Red Bricks இரண்டுமே பெரும்பாலும் ஒரே அளவில் தான் உள்ளது. இருப்பினும், சாம்பல் நிற செங்கல்களை விட சிகப்பு நிற செங்கல்கள் அதிக வலிமையையும் எடையையும் தாங்கும் திறன் உடையதால் சிகப்பு நிற செங்கல்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.
எனவே, நீங்கள் குறைந்த விலையில் மற்றும் ஓரளவிற்கு வலிமையும் உடைய செங்கல்களை வாங்க விரும்பினால் Fly Ash Bricks (சாம்பல் நிற செங்கல்) சிறந்ததாக இருக்கும். மறுபுறம், நீங்கள் அதிக எடையும், அதிக வலிமையையும் மற்றும் அதிக விலையில் உள்ள செங்கலை வாங்க விரும்பினால் Red Bricks (சிகப்பு செங்கல் அல்லது களிமண் செங்கல்) சிறந்ததாக இருக்கும்.
கிராமம் vs நகரம் இரண்டில் எது சிறந்தது
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |