பாத்திரம் விளக்க எது சிறந்தது ஸ்பாஞ்சா? பிரஷ்சா?
முன்பெல்லாம் பாத்திரம் விளக்குவதற்கு தேங்காய் நார் மற்றும் அடுப்பு சாம்பல் தான் பயன்டுத்தினார்கள். அதில் எந்த ஒரு தீங்குகளும் விளைவிக்கவில்லை.. ஆனால் நாம் காலங்களை கடந்து செல்லும் போதும். நாகரிகம் என்ற அநாகரீகமும் வளந்துவிட்டது.. குறிப்பாக பாத்திரம் விளக்குவதற்கு கூட ஸ்பாஞ், பிரஷ் என்று நிறைய வகையான பொருட்கள் வந்துவிட்டது. அந்த வகையில் பாத்திரம் விளக்குவதற்கு எது சிறந்தது ஸ்பாஞ்சா? பிரஷ்சா? என ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் எது நல்லது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
பாக்டீரியா:
நாம் நோய்களால் பாதிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் பாக்டீரியா என்பதும் நுண்கிருமிகள் தான்.. இந்த பாக்டீரியா வெறும் கண்களில் பார்த்தால் தெரியாது ஆனால் மைக்ரோஸ்கோப் (Microscope) வழியாக பார்த்தால் கண்டிப்பா தெரியும். இந்த பாக்டீரியாவில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய நல்ல பாக்டீரியாவும் இருக்கிறது. அதேபோல் உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாவும் இருக்கிறது.. ஆக இதனை மக்களுக்கு உணர்த்த சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அது என்ன ஆராய்சிகள் என்றால் நாம் இப்பொழுது பார்க்கலாம்.
ஆய்வில் வந்த தகவல் பாத்திரம் கழுவ எது சிறந்தது ஸ்பாஞ்சா? பிரஷ்சா? | Which is better for washing dishes
பாத்திரம் விளக்குவதற்கு பயன்படுத்து பொருட்களான ஸ்பாஞ், பிரஷ் என்று இரண்டு வகைகள் உள்ளது. இவற்றில் எது மிகவும் சிறந்தது என்பதை பற்றிய ஆராட்சி தான் அது.
இந்த ஆராட்சி எதற்கு நடத்தப்பட்டது என்றால் நாம் பாத்திரம் கழுவ பயன்படும் ஸ்பாஞ், பிரஷ் இவற்றில் பாக்டீரியாகள் அதிகமாக இதில் உள்ளது என்பதை அறிவதற்கு தான்.
அப்படி நடத்திய ஆராய்ச்சியில் பிரஷை விட ஸ்பாஞ்சில் தான் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருக்கிறதாம்.. எவ்வளவு பாக்டீரியாக்கள் என்றால் இந்த உலகில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமான பாக்டீரியாக்கள் நாம் பயன்படுத்தும் ஒரு ஸ்பாஞ்சில் ஒளிந்துள்ளதாம்.
இதற்கு என்ன காரணம் என்றால் பிரஷ் சீக்கிரம் ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து விடும்.. ஆனால் ஸ்பாஞ் அப்படி கிடையாது அது காய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.. ஆக பாக்டீரியாவுக்கு ஈரம் தான் மிகவும் பிடித்தமான இடம் ஆக நாம் பயன்படும் ஸ்பாஞ்சில் அதிகளவு இருப்பதற்கு காரணமாக இருக்கிறது..
ஆக நாம் பயன்படுத்தும் ஸ்பாஞ் அல்லது பிரஷ் எதுவாக இருந்தாலும் சரி அதனை பயன்படுத்திய பிறகு வெயிலில் நன்கு காய வைத்திவிட வேண்டும்.. 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்பாஞ்சை மாற்றிவிட வேண்டும்.
குறிப்பாக நாம் 10-15 வருடங்களுக்கு முன் பயன்படுத்திக்கொண்டிருந்த தேங்காய் நார்களை பாத்திரம் விளக்க பயன்படுத்தலாம்.. இதனை ஒன்று அல்லது இரண்டு முறைக்கு பயன்படுத்திவிட்டு விட்டு தூக்கியெறிந்துவிடலாம் இதனால் சுற்றுலாவுக்கு எந்த பாதிப்புகளும் வராது அதேபோல் நம் உடலுக்கு எந்த ஒரு பாதிப்புகளும் வராது.
இதுபோன்று தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Interesting information |