லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் இவற்றில் எது சிறந்தது..?

Advertisement

Which is Better Health Insurance or Life Insurance

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் அவசியம். இதனால் அனைவரும் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களில் செமிக்க தொடங்கிவிட்டார்கள். அதிலும் குறிப்பாக எதிர்காலத்திற்கு நமக்கு உதவியாக இருக்கக்கூடிய இன்சூரன்ஸ் பாலிசியில் சேமிப்பதை பெரும்பாலானவர்கள் விரும்பிகிறார்கள். அப்படி பெரும்பாலானவர்கள் சேமிக்க நினைப்பது ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது லைஃப்  இன்சூரன்ஸ் தான். ஆகையால், இப்பதிவில் உங்களுக்கு எது சிறந்தது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது உடலில் நோய் அல்லது காயம் ஏற்பட்டால் அதன் செலவுகளுக்கான காப்பீட்டை வழங்கும் ஒரு காப்பீட்டு திட்டமாகும். லைஃப் இன்சூரன்ஸ் என்பது ஒருவரின் இறப்பிற்கு பிறகு அவர்களின் குடும்பத்திற்கு காப்பீடு வழங்கும் திட்டமாகும். இந்த இரண்டு இன்சூரன்ஸ் பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

Difference Between Life Insurance and Health Insurance:

 difference between life insurance and health insurance in tamil

லைஃப் இன்சூரன்ஸ் (Life Insurance) ஹெல்த் இன்சூரன்ஸ் (Health Insurance)
இது முழுமையான காப்பீட்டை வழங்கும் வாழ்நாள் கவரேஜ் ஆகும். பாலிசிதாரரின் மரணத்தின் போது அவரின் குடும்பத்திற்கு காப்பீடு வழங்கப்படும். இது மருத்துவ மற்றும் சுகாதார தேவைகளை உளளடக்கியது. ஆகையால், இது இது மருத்துவச் செலவுகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும்.
பாலிசிதாரரின் தேர்வு செய்யும் காப்பீடை பொறுத்து நிலையான மற்றும் நெகிழ்வான பிரீமியங்கள் வழங்கப்படும். முதலீடு திட்டங்களும் உள்ளது. நிலையான பிரீமியம் மட்டுமே கிடைக்கும். இத்திட்டத்தின் நோக்கம்  மருத்துவம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகும்.
லைஃப் இன்சூரன்ஸ் ஒரு நீண்டகால திட்டம் ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு குறுகிய கால திட்டம்.
இது, பாலிசிதாரர் இறந்தவுடன் இத்திட்டம் முடிவடைந்து விடும். பாலிசியைப் புதுப்பித்துக்கொள்வதால், தொடர்ந்து சுகாதாரப் பாதுகாப்பை பெறலாம்.
பாலிசிதாரர் இறந்ததும் அவர் குடும்பம் அல்லது அவரை சார்ந்தவர்களுக்கு காப்பீடு அளிக்கப்படும். வாழ்நாள் முழுவதும் உங்கள் மறுத்துவ செலவுகளை பார்த்து கொள்கிறது.

பிளாட் வாங்குவது Vs வீடு வாங்குவது..! இது இரண்டில் எது சிறந்தது தெரியுமா..?

லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் இவற்றில் எது சிறந்தது..?

இன்சூரன்ஸ் விபரம்  லைஃப் இன்சூரன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ்
முதலீடு இதில் நீங்கள் முதலீடு செய்தால் இறப்பிற்கு பின் உங்கள் குடும்பம் பொருளாதார ரிதியாக பாதுகாக்கப்படும். இக்காலத்தில் மருத்துவ செலவுகள் உயர்ந்து வருவதால் திடீரென்று உடல்நிலை சரியில்லை என்றால் ஹெல்த் இன்சூரன்ஸ் உதவியாக இருக்கும்.
நன்மைகள் பாலிசிதாரர்க்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தொகை இறப்பிற்கு பிறகு குடும்பத்திற்கு வழங்கப்படும். அணைத்து வகையான   சிகிச்சைச் செலவுகளையும் ஹெல்த் இன்சூரன்ஸ் பார்த்து கொள்ளும்.
திட்டங்களின் வகைகள்

மேலே, கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, தேவைகளை கருத்தில் கொண்டு கருத்தில் உங்களுக்கு சாதகமான ஒன்றை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள். அதாவது, உங்களின் உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் மருத்துவமனை செலவுகளை ஏற்படுத்தினால் ஹெல்த் இன்சூரன்ஸ் சிறந்த தீர்வாக இருக்கும். அதேபோல், நீங்கள் இறந்தபிறகு, உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்பினால் லைஃப் இன்சூரன்ஸ் சிறந்த விருப்பமாகும்.

வீட்டிற்கு யூபிஎஸ் Vs இன்வெர்ட்டர் இரண்டில் எது சிறந்தது தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement