மரத்தால் செய்யப்பட்ட Vs ஸ்டீல் கதவு இரண்டில் வீட்டிற்கு எது சிறந்தது..?

Advertisement

Which is Better Steel or Wood Door 

மனிதனாக பிறந்த அனைவருக்கும் வீடு என்பது அத்தியாவசியமான ஒன்று. இவ்வாறு நமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் வீட்டினை பார்த்து பார்த்து அழகாக கட்டுவோம். இத்தகைய முறையில் நாம் கட்டும் வீட்டிற்கு கதவு என்பதை நிச்சயமாக தேவைப்படும். ஏனென்றால் கதவு இருந்தால் மட்டுமே வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். ஆரம்பகால காலத்தில் வீட்டிற்கு கதவு போட வேண்டும் என்றால் மரத்தால் ஆன கதவுகளை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது உள்ள இந்த நவீன காலத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீலினால் செய்யப்பட்ட பல வகையான பயன்படுத்துகிறார்கள். அதிலும் சிலருக்கு இந்த கதவுகளில் எது நம்முடைய வீட்டிற்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. அதனால் இன்று ஒரு உதாரணமாக வீட்டிற்கு மரத்தால் செய்யப்பட்ட Vs ஸ்டீல் கதவு இரண்டில் எது சிறந்தது என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மரத்தால் செய்யப்பட்ட கதவு:

மரத்தால் செய்யப்பட்ட கதவுகள் என்பது ஒரே ஒரு மரத்தினை மட்டும் உள்ளடக்கியதாக இல்லாமல் வெவ்வேறு மரத்தில் செய்யப்படுகிறது. (எ.கா) வெப்பம் மரம், பூவரசு மரம், தேக்கு மரம் என இவ்வகை மரங்களில் தான் மரத்தால் ஆன கதவுகள் செய்யப்படுகிறது.

wood door in tamil

  • மரத்தால் ஆன கதவுகள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இது பல வருடங்கள் தாண்டியும் நீடித்து இருக்கக்கூடிய வலிமையினை கொண்டுள்ளது.
  • அதேபோல் மரத்தால் செய்யப்பட்ட கதவுகள் ரசாயன பொருட்கள் எதுவும் சேர்க்கமால் சுத்தமான மரத்தினை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
  • மரத்தால் செய்யப்பட்ட கதவுகளுக்கு பராமரிப்பு என்பது மிகவும் குறைவானது.
  • இதனுடைய வலிமை ஆனது அதிகமாக இருந்தாலும் கூட பராமரிப்பு என்பது மிகவும் குறைவு தான்.
  • ஆனால் கரையான்கள் அரிக்கும் தன்மை என்பது மரத்தால் செய்யப்பட்ட கதவுகளுக்கு உண்டு.
  • மேலும் மரத்தால் செய்யப்பட்ட கதவுகளுக்கு ஆயுட்காலம் தோராயமாக 40 வருடம் ஆகும்.
  • அதுமட்டும் இல்லாமல் இத்தகைய கதவுகளின் விலை மிகவும் குறைவு.

சிமெண்ட் தரை VS டைல்ஸ் இரண்டில் வீட்டிற்கு எது சிறந்தது 

ஸ்டீல் கதவுகள்:

இந்த நவீன காலத்திற்கு ஏற்றவாறு பொருட்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நினைப்பதனால் பெரும்பாலான மக்கள் ஸ்டீல் கதவுகளை தான் விரும்புகிறார்கள். மேலும் இதில் மக்கள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைன்களில் பெறுகிறார்கள்.

steel door in tamil

  • ஸ்டீல் கதவுகள் பெரும்பாலும் வீட்டின் வெளிப்புறங்களை விட உட்புறங்களுக்கு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த கதவுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் கூட நீண்ட நாட்கள் நீடித்து உழைப்பது இல்லை.
  • ஸ்டீல் கதவுகளை பராமரிப்பதற்கு நிறைய ரசாயன பொருட்கள் என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால் இதற்கு பராமரிப்பு மிகவும் அதிகம்.
  • கரையான்கள் அரிக்கும் பிரச்சனை என்பது ஸ்டீல் கதவுகளுக்கு கிடையாது.
  • மேலும் இந்த கதவுகளின் ஆயுட் காலம் என்பது மிகவும் குறைவானது. அதேபோல் இந்த கதவுகளின் விலை என்பது மரத்தால் செய்யப்பட்ட கதவுகளை விட அதிகமாக உள்ளது.
  • அதேபோல் ஸ்டீல் கதவுகள் குறைவான வலிமையினை கொண்டுள்ளது.

வீட்டின் சுவர் மற்றும் தரையை சட்டுனு கிளீன் செய்ய இதை ட்ரை பண்ணுங்க 

Steel or Wood Door இரண்டில் எந்த கதவு சிறந்தது:

வீட்டினை நாம் எப்போதும் அலங்கரிக்கப்ட்ட முறையில் வைத்து இருக்க வேண்டும் என்று பல வகையான கதவுகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் கூட அனைத்தினையும் ஒப்பிட்டு பார்க்கும் மரத்தால் செய்யப்பட்ட கதவுகள் தான் வீட்டிற்க்கு சிறந்தது. 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement