டெம்பர்டு கிளாஸ், பிளாஸ்டிக் திரை இவற்றில் எது உங்கள் மொபைலுக்கு சிறந்தது?

Advertisement

உங்கள் மொபைலுக்கு எது சிறந்தது?

நம்மில் பலருக்கு நமது மொபைல் தான் உலகமாகி விட்டது. காலையில் நாம் விழித்ததும் முதலில் பார்ப்பது மொபைலை. அப்படி காலையில் பார்க்கும்  மொபைல் திரையில் பல கீறல்கள் இருந்தால் நமது மனம் கவலை அடையும். எப்படியும் நம்முடைய மொபைல் சில ஆயிரங்கள் முதல் பல ஆயிரங்களில் தான் இருக்கும். விலை அதிகமாக வாங்கிய மொபைலை நாம் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துவோம். ஆனால் ஏதோ ஒரு சூழலில் நமது மொபைல் திரையில் கீறல்கள் ஏற்பட்டால் அதற்கும் நாம் செலவு செய்ய வேண்டிய நிலை வரும்.

உங்கள் மொபைல் back கவரை தேடுவதற்கும் பயன்படுத்துவதற்கு நீங்கள் அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். உங்கள் மொபைல் டிஸ்பிலேயில் விழும் கீறல்களில் இருந்து பாதுகாக்க உங்கள் மொபைல் front லேயரிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மொபைல் டிஸ்பிலேயில் விழும் கீறல்களில் இருந்து பாதுகாக்க டெம்பர்டு கிளாஸ், பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர், கொரில்லா கிளாஸ், fiber கிளாஸ்  போன்றவை பயன்படுத்தப்படுகிறது. டெம்பர்டு கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் இவற்றில் எது உங்கள் மொபைலுக்கு சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்கள் மொபைலை பாதுகாக்க 5 வழிகள்

Tempered Glass vs Plastic Screen 

விலை:

Mobile Screen Cracked

பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர், டெம்பர்டு கிளாஸ்யை விட மலிவானது. ஆனால் இரண்டின் தரத்தை ஒப்பிடும் போது பொருட்களின் தரத்திற்கு ஏற்ப விலை மாறுபடுகிறது. டெம்பர்டு கிளாஸ்யை ஓலியோபோபிகுடன் வாங்கலாம். இந்த ஓலியோபோபிக் கைரேகையின் தாக்கத்தை குறைகிறது. ஒரு தரமான டெம்பர்டு கிளாஸ் விலையில் நீங்கள் பல பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டரை வாங்கி விடலாம்.

ஆயுள்

டெம்பர்டு கிளாஸ், பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் விட அதிக நாட்கள் உழைக்க கூடியது. டெம்பர்டு க்ளாஸ்ச்சின் அடர்த்தி 0.3 மி.மீ முதல் 0.5 மி.மீ வரை இருக்கும். ஆனால், பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் 0.1 மி.மீ தடிமன் மட்டும் கொண்டது.

அதனால் பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டரில் எளிதில் கீறல்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டரில்  தேய்மானம் அதிகரிக்கும். பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்யுடன் ஒப்பிடும் போது டெம்பர்டு கிளாஸ் சிறந்தது. 

மொபைல் போனில் சவுண்ட் அதிகரிக்க Settings-ல் இந்த ஆப்ஷனை மட்டும் மாத்திடுங்க..

பயன்பாடு:

டெம்பர்டு கிளாஸ் பயன்படுத்தும் போது உங்களின் விரல்கள் மிகவும் சீராக இயங்கும். ஆனால் பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டரில் நீங்கள் பயன்படுத்தும் போது கொஞ்சம் வித்தியாசம் காணப்படும். அதனை பயன்படுத்துவது சில நேரங்களில் எரிச்சலாக இருக்கும். 

ஒட்டுவது:

உங்கள் மொபைலில் பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டரை ஓட்டுவது கடினம். ஆனால்  full or bezel adhesive போன்ற டெம்பர்டு கிளாஸ் பயன்படுத்துவது எளிது. 

Look:

பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் விட டெம்பர்டு கிளாஸ் பயன்படுத்தும் போது உள்ள அழகான நேர்த்தியான அமைப்பை தருவதில்லை.

பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் காற்று புகுந்து மொபைலின் நேர்த்தியான அமைப்பை குழைக்கிறது.

Train-ல போகும் போது உங்களுடைய மொபைல் கீழே விழுந்தால் இனி பயப்பட வேண்டாம்..! ஏன்னா அதுக்கு ஒரு வலி கிடைச்சிடுச்சு..!

மேல் கூறியுள்ள காரணங்களை பார்க்கும் போது பிளாஸ்டிக் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் விலை மலிவானதாகவும் மிகவும் மென்மையானதாகவும் இருப்பதால் அதனை பயன்படுத்த விரும்புவீர்கள் ஆனால் அது விரைவில் தேய்மானம் ஆகிவிடும்.

உங்களின் மொபைல் திரையின் ஆயுள் காலத்தை குறைக்கும். ஆனால் டெம்பர்டு கிளாஸ் சற்று கடினமாக காணப்படுவதால் அவற்றில் ஏற்படும் விரிசல் குறையும்.

எனவே உங்களின் மொபைல் திரையின் பாதுகாப்புக்கு சிறந்த தேர்வாக டெம்பர்டு கிளாஸ் இருக்கும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற பொதுநலம்.காம் தளத்தை தொடர்ந்து பாருங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement