Mother’s Share in Deceased Son’s Property
பொதுவாக நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த தமிழ் மொழியில் எண்ணற்ற பழமொழிகளை கூறுவார்கள். அந்த வகையில் சொத்து மற்றும் பணம் ரீதியான பல பழமொழிகளை கூறுவார்கள். அதாவது 4 வயதில் அண்ணன், தம்பி 10 வயதில் பங்காளி என்று கூறுவார்கள். ஏனென்றால் இளம் வயதில் இருக்கும் போது எந்த விதமான எதிர்பார்ப்பும் இருக்காது. அதுவே வயது அதிகரிக்க அதிகரிக்க தனக்கானது என்று தனியாக இருக்க வேண்டும் என்ற கருத்து மனதில் தோன்றுகிறது. இத்தகைய கருத்துக்களை சிலர் ஆழமாக மனதில் பதித்து கொண்டு வளர்ந்த கணக்கிட முடியாத அளவிற்கு சொத்துக்களை வாங்கி சேர்க்கிறார்கள். இவ்வாறு பணம் சம்பாதித்து சொத்துக்களை சேர்ப்பது என்பது மிகவும் கடினமாக இருப்பதை விட அவற்றை அனைவருக்கும் பிரித்து கொடுக்கும் போது தான் பெரிய பிரச்சனை எழுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு உறவு முறையினருக்கும் சொத்தில் நமக்கு என்ன பங்கு இருக்கிறது என்ற கேள்வி வருகிறது. அதனால் இன்று மகனின் சொத்தில் அம்மாவிற்கு பங்கு உண்டா.? இல்லையா..? என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
மகனின் சொத்தில் அம்மாவுக்கு பங்கு உண்டா..?
இன்றைய கால சட்ட விதிமுறைகளை பார்க்கும் போது ஒரு ஆணிற்கு எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ, அதே அளவிற்கு ஒரு பெண்ணிற்கும் சம உரிமைகள் உள்ளது.
அதன் படி ஒரு வீட்டில் சொத்துக்களை பிரித்தாலும் கூட அதில் ஆண்களுக்கு இருக்கும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.
அந்த வகையில் ஒரு ஆண் திடீரென்று உயில் எதுவும் எழுதி வைக்காமல் இருந்து விட்டால் அத்தகைய சொத்துக்கள் அவருடைய ஆண் வாரிசுகளுக்கு தான் போய் சேரும்.
ஒருவேளை அவருக்கு வாரிசுகள் எதுவும் இல்லாத பட்சத்தில் அம்மா வழி அல்லது அப்பா வழி சொந்தங்களுக்கு சொத்துக்கள் போய் சேரும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இறந்த நபரின் அம்மாவிற்கு இதில் பங்கு உண்டா..? என்று கேட்டால்.. தாராளமாக பங்கு உண்டு.
அதாவது ஒரு ஆண் இறந்து பட்சத்தில் அவருடைய அம்மாவிற்கு முன்பாகவே சொத்துக்கள் ஏதேனும் இருந்தாலும் கூட ஒரு மகனின் சொத்தில் தாயிற்கு பங்கு மற்றும் முழு உரிமை உண்டு. அதேபோல் இறந்தவரின் மனைவிக்கும் இதில் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |