பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Who Owns Grandmother’s Property

இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. சொத்து பற்றிய ஒரு தகவலை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். என்ன தான் பாசக்கார அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் சொத்து என்று வந்து விட்டால் நீ யாரோ நான் யாரோ தான். அதுபோல இந்த பதிவை படித்து கொண்டே பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..?

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்..? 

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்

பொதுவாக சொத்து என்றால் பூர்வீக சொத்து, பரம்பரை சொத்து அல்லது தான் சொந்தமாக சேர்த்து வைத்த சொத்து என்று சொல்லலாம். பரம்பரையாக வந்த சொத்தை என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் பல விதிகள் மற்றும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

பேரக்குழந்தைகள் மூதாதையர் சொத்தின் மீது உரிமைகளை அனுபவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் பாட்டியின் சொத்து என்று வரும்போது, ​​இந்து குடும்பங்களில் உயில் இருந்தால், அந்த உயிலின் அடிப்படையில் சொத்துகளை பகிர்வு செய்ய வேண்டும்.

பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..?

 

உங்கள் பாட்டி காலப்போக்கில் இறந்துவிட்டால், இந்து வாரிசுச் சட்டத்தின் கீழ்  சட்டப்பூர்வ வாரிசுகளின் அடிப்படையில் சொத்துப் பிரிப்பு செய்ய வேண்டும். சரி பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா..? 

பாட்டி இல்லை என்றால் அந்த சொத்து தாத்தாவிற்கு செல்லும். அதுவே பாட்டிக்கு 1 மகன் மட்டும் இருந்தால் சொத்து அந்த மகனுக்கு செல்லும்.

அதுபோல பாட்டிக்கு 2 அல்லது 3 மகன்கள் இருந்தால் அந்த சொத்தில் பாகப்பிரிவினை செய்து சம பாகங்களாக பிரித்து கொடுக்க வேண்டும்.

பாட்டிக்கு மகன்கள் இல்லை பேரன் பேத்திகள் இருந்தால் அவர்களுக்கு சமமாக பங்கு பிரித்து கொடுக்க வேண்டும்.

அதுபோல பாட்டிக்கு 2 மகன்களில் 1 மகன் மட்டும் இருக்கிறார். இன்னொரு மகனின் மகள் மற்றும் மகன் இருந்தால் அந்த சொத்துக்களை சம பாகங்களாக பிரித்து கொடுக்க வேண்டும். இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைகள் பாட்டி சொத்தை அனுபவிக்கலாம் என்று வாரிசு உரிமை சட்டம் சொல்கிறது.

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement