வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம்
பொதுவாக அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக பணத்தை தினமும் சம்பாதித்து வருகிறோம். அதில் நமது தேவைகளை பூர்த்தி செய்தது போக மீதும் உள்ள பணத்தை வைத்து சிலர் சொத்து வாங்கி சேர்க்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் சொத்து வாங்குவது வேண்டும் என்றால் கொஞ்சம் ஈஸியாக இருக்கலாம். ஆனால் அந்த சொத்தினை உரிமை கொண்டாடி பிரிப்பது மிகவும் கடுமையான ஒரு விஷயமாக உள்ளது. அதிலும் ஒரு சிலர் வீட்டில் நிறைய நபர்கள் இருப்பார்கள். சிலர் வீட்டில் கணவன் மனைவி என இரண்டு நபர்கள் மட்டும் தான் இருப்பார்கள் பிள்ளைகள் அவர்களுக்கு இருக்காது. இப்படி வாரிசு எதுவும் இல்லாமல் இருக்கும் சொத்து யாருக்கு சொந்தம் என்பது பலருடைய கேள்வியாகவும் மற்றும் குழப்பமாகவும் உள்ளது. ஆகவே இன்றைய பதிவில் வாரிசு இல்லதா சொத்து யாருக்கு சொந்தம் தெரிந்துகொள்ளவோம் வாருங்கள்.
வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம்:
பொதுவாக சொத்து என்றால் அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்கள் உரிமை கொண்டாடி எப்படியாவது அதனை சரிபாதியாக பிரித்து வாங்கி விடுவார்கள். வீட்டில் எந்த பிரச்சனை நடக்கிறதோ இல்லையோ சொத்து பிரச்சனை இருக்கக்கூடும். சொத்து அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி இருக்கின்ற சொத்துக்கு பிரச்சனை வரும். அந்த வகையில் ஒருவருக்கு குழந்தையே இல்லை அதாவது வாரிசே இல்லையென்றால் அந்த சொத்து யாருக்கு வரும் என்பதை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
இதே கணவன் மனைவி இருவர் மட்டும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பிள்ளைகள் எதுவும் இல்லை என்றால் அவர்களுடைய அத்தகைய சொத்தானது வாரிசு இல்லாத சொத்து என்று அழைக்கப்படும். கணவன் மனைவி இருவரும் இறந்த பிறகு இத்தகைய வாரிசு இல்லாத சொத்தானது இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தம் ஆகும்.இத்தகைய இரண்டாம் நிலை வாரிசு என்பது கணவர் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரி அல்லது மனைவி உடன் பிறகு சகோதரி மற்றும் சகோதரர் இவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது. ஆகவே வாரிசு இல்லாத சொத்து இவர்களுக்கு மட்டுமே சொந்தம் ஆகும்.
அதுவே வாரிசு இல்லாத நபர் அவருடைய விருப்பத்தின் படி யாருக்கு உயில் எழுதி வைக்கிறாரோ அவருக்கு சொந்தமாகும்.
இரண்டாம் நிலை வாரிசு என்பவர் யார்:
இரண்டம் நிலை வாரிசு என்பது, தம்பிகளுக்கு வாரிசு இல்லையென்றால் சகோதரர்கள், தந்தை, தாய் போன்றவர்கள் இரண்டாம் நிலை வாரிசுகளாக இருக்கிறார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |