திருமணமான மகனின் சொத்தில் தாய்க்கு உரிமை உண்டா.! இல்லையா.!

Advertisement

மகனின் சொத்தில் தாய்க்கு உரிமை உண்டா.!

நம் முன்னோர்கள் ஒரு பழமொழி கூறுவார்கள். அதாவது  4 வயதில் அண்ணன், 10 வயதில் பங்காளி என்று கூறுவார்கள். ஏனென்றால் சிறு வயதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுவோம். ஆனால் வயது ஆக ஆக தனக்கென்று தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவை நாளடைவில் பெரியவனாய் ஆகிய பிறகு சொத்தும் தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதில் விட்டு கொடுக்க முடியாத மன நிலையும் ஏற்படுகிறது. அம்மா அப்பாக்கள் பிள்ளைகளுக்காக சொத்தை சேர்த்து வைக்கிறார்கள்.

சொத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் யார் யாருடைய சொத்து யாருக்கு சொந்தம் என்று அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் மகனின் சொத்து யாருக்கு சொந்த என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

திருமணமான மகனின் சொத்து யாருக்கு சொந்தம்:

திருமணமான மகனின் சொத்து அவர் யாருக்கு உயில் எழுதி வைத்திக்கிறார்களோ அவர்களுக்கு தான் உரிமை உண்டு. ஒருவேளை அவர் எந்த உயிலும் எழுதி வைக்காமல் இறந்து விட்டால் சொத்து யாருக்கு சொந்தம் என்று அவர் இறந்த 30 நாட்களுக்குள் வீட்டில் பூகம்பே வெடிக்கும்.

இதனை சரி செய்வதற்கு வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் வைத்து பேசுவார்கள். எப்படி பேசினாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு தான் சொத்து சம்மந்தப்பட்டவற்றிற்கு தீர்வு காண வேண்டியிருக்கும். அந்த வகையில் இப்போது திருமணமான மகனின் சொத்து யாருக்கு சொந்தம் என்று அறிந்து கொள்வோம்.

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா 

மகன் திருமணம் ஆகாமல் இறந்து விட்டால் தந்தை, தாய், உடன் பிறந்தவர்களுக்கு சொந்தமாகும்.

அதுவே மகன் திருமணம் ஆனவர்களாக இருந்தால் அவரது மனைவிக்கும், குழந்தைகளுக்கு மட்டும் உரிமையாகும்.

திருமணமான மகனின் சொத்தை பங்கு கேட்டு தாய் மற்றும் தந்தை எந்த வழக்கையும் இட முடியாது.

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement