Who Was The First Tamil To Win The Nobel Prize in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும். சாதனை படிக்க வேண்டியதற்கான அனைத்து திறமைகளும் ஒவ்வொருவர்களிடமும் இருக்கிறது.
அப்படி நம் நாட்டிலும் ஆண்கள் பெண்கள் பலரும் சாதனைப் படைத்து பல பரிசுகளை வென்றிருக்கிறார்கள். அப்படி சாதனை படைத்து நோபல் பரிசு பெற்ற முதல் தமியார் என்று என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம். சரி நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்:
பொதுவாக ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) என்பவரின் நினைவு நாள் அன்று தான் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நோபல் பரிசானது வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் போன்ற துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
1901-ம் ஆண்டில் இருந்து இந்த நோபல் பரிசு பல சாதனையளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 13 இந்தியர்கள் இந்த பரிசை வென்றுள்ளனர். அவர்களில் சிலர் இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர் ஆவர்.
சரி முதல் முதலில் இந்த நோபல் பரிசை பெற்ற இந்தியர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்
நோபல் பரிசு பெற காரணம் என்ன:
சரி சி.வி. ராமன் என்பவர் தான் முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற தமிழர் என்று போற்றப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் தேசிய அறிவியல் தினம் கொண்டாடுவதற்கு முக்கிய காரணமே இவர் தான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..?
ஆமாங்க..! ஆண்டுதோறும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் சர் சி.வி. ராமனை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபட்டு வருகிறது.
சி.வி.ராமன் “ஒளிச் சிதறல்” குறித்த தனது சோதனைகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். ஏ.வி.என் கல்லூரியில் படிக்கும் போது தனக்குள் தோன்றிய யோசனைகள் தான் இந்த நோபல் பரிசுக்குக் காரணம் என்று சி.வி.ராமன் தன் வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார்.
அவர் தனது முக்கியமான ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் தேதி தான் தேசிய அறிவியல் தினமான கடைப்பிடிக்கப்படுகிறது.
படைத்த சாதனைகள்:
திருச்சியில் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தவர் தான் இந்த சந்திரசேகர வெங்கட ராமன். இவர் தன் 16 ஆவது வயதில் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முதல் நிலையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
அதன் பின் அவருடைய 18 ஆவது வயதிலேயே முதல் ஆய்வு அறிக்கை லண்டன் அறிவியல் இதழில் வந்தது. அறிவியலில் அவருடைய கால் தடம் அப்போதே உலகளவில் பதிக்கப்பட்டது. பிற்காலத்தில் ஒளி, ஒலி, காந்தசக்தி உள்ளிட்ட பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்படி இவர் கண்டுபிடித்த “ஒளிச் சிதறல்” என்ற ஆராய்ச்சிக்காக தான் நோபல் பரிசு பெற்றார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |