இரவு நேரத்தில் விலங்குகளின் கண்கள் ஏன் மின்னுகிறது உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Why Animals Eyes Shine At Night

நாம் பார்க்க போகும் இந்த பதிவு அனைவருக்கும் மிகவும் சுவாரஸ்யமானதாக  இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி உங்கள் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற உயிரினங்களை இரவு நேரத்தில் பார்த்திருக்கிறீர்களா..? அதனுடைய கண்கள் வித்தியாசமானதாக பளிச்சென்று மின்னும். ஏன் அப்படி மின்னுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? காரணம் தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள்

இரவு நேரத்தில் விலங்குகளின் கண்கள் ஏன் மின்னுகிறது..? 

Why Animals Eyes Shine At Night

நாய், பூனை, சிங்கம் மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகளின் கண்கள் இருட்டில் மின்னும். இதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். ஏன் அப்படி மின்னுகிறது என்று பலருக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும். அதில் சிலர் அதற்கான காரணத்தை தேடியிருப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு.

 விலங்குகளின் கண்கள் ஒரு சிறப்பு சவ்வு மூலம் செயல்படுகிறது. அதாவது விலங்குகளின் கண்களுக்கு பின்னால் ஒரு சிறப்பு வகை பிரதிபலிப்பு அடுக்கு இருக்கிறது. அதை டேப்டம் லூசிடம் (Tapetum Lucidum) என்று  அழைக்கப்படுகின்றன. இந்த டேப்டம் லூசிடம் என்பது தமிழில் “ஒளியின் நாடா” என்று அழைக்கப்படுகிறது. 

இந்த டேப்டம் லூசிடம் விழித்திரைக்கு பின்னால் நேரடியாக அமைந்துள்ளது. நட்சத்திர ஒளி அல்லது நிலவொளி போன்ற இரவில் காணப்படும் சிறிய ஒளிக் கதிர்கள் கண்ணுக்குள் நுழையும் போது, ​​இது விலங்குகளின் கண்களில் ஒளி மின்அழுத்திகளால் உறிஞ்சப்படும் ஒளியின் அளவை அதிகரிக்கிறது.

இதன் காரணமாக விலங்குகளின் கண்கள் இருட்டில் இருக்கும் விஷயங்களை எளிதாகக் காண முடியும்.

சிங்கத்தையே வெல்லக்கூடிய 6 விலங்குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

 

இந்த டேப்டம் லூசிடம் என்பது பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற சில முதுகெலும்பு உள்ள விலங்குகளின் கண்களில் காணப்படும் திசுக்களின் பிரதிபலிப்பு அடுக்கு என்று சொல்லப்படுகிறது.

முதுகெலும்பு இல்லாத சில விலங்குகளுக்கு இந்த டேப்டம் லூசிடம் என்ற அடுக்கு கண்களின் விழித்திரைக்கு பின்புறத்தில் மறைந்துள்ளது. அதனால் தான் சில விலங்குகளின் கண்கள் இருட்டில் மின்னுவதில்லை.

அதேபோல டேப்டம் லூசிடம் தயாரிக்கப்படும் கனிமங்களைப் பொறுத்து சில விலங்குகளின் கண்களின் நிறம் மாறுகிறது. நாம் காணும் சில விலங்குகளின் கண்கள் சில நிறங்களில் காணப்படும். அதாவது பொதுவான நாய்களின் கண்கள் நீல நிறத்திலும், பூனைகளின் கண்கள் தங்கம் அல்லது மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

இவை அனைத்துமே விலங்குகளின் விழித்திரைக்கு பின்புறத்தில் இருக்கும் டேப்டம் லூசிடம் என்ற அடுக்கு காரணமாக இருட்டில் சில விலங்குகளின் கண்கள் பிரகாசிக்கின்றன என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் கருப்பு விலங்குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement