தண்ணீர் பாட்டில் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
பள்ளி குழந்தைகள் முதல் வேலை போகிறவர்கள் என அனைவரும் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வார்கள். மேலும் வீட்டிலும் தண்ணீர் பாட்டில் பயன்படுத்துவார்கள். இதில் பல வகைகள் இருந்தாலும் மக்கள் அதிகமாக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில் தான். இந்த பிளாஸ்டிக் பாட்டில் வாங்கும் போது கம்மியான விலையில் இருக்கிறதா, அழகாக இருக்கிறதா, என்ன கலரில் வாங்குவது என்று தான் பார்த்து வாங்குவோம். முக்கியமாக பிளாஸ்டி பொருட்களை பயன்படுத்துவதே நம் உடலிற்கு தீங்கினை விளைவிக்க கூடியதாக இருக்கும். அதனால் முடிந்தவரை பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லை என்னால் பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்றால் அதில் சில விஷயங்களை பார்த்து வாங்குங்கள். அவை என்னென்ன பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தண்ணீர் பாட்டிலில் பார்த்து வாங்குவது:
கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கும் போது Expiry பார்த்து வாங்க வேண்டும். அதில் போட பட்டிருக்கும் தண்ணீருக்கு என்று பல பேர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது தான் இல்லை. தண்ணீர் பாட்டிலில் உள்ள Expiryஆனது பாட்டிலுக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் பிளாஸ்டிக் பாட்டிலை கெமிக்கல் கலந்து தான் தயாரிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்தது. அதனால் நீங்கள் பாட்டிலை சூரிய ஒளி படும் இடத்திலோ அல்லது வெப்பம் அதிகமான இடத்தில் வைத்தாலோ பாட்டிலில் உள்ள கெமிக்கல் தண்ணீரில் கலந்து விடும். இதனை குடிப்பதால் நம் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சில பேர் தண்ணீர் பாட்டிலை வாங்கி விட்டு தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை பயன்படுத்துவார்கள். அவர்களெல்லாம் இனிமேல் பயன்படுத்தாதீர்கள்.
நீங்க கேட்கலாம் கடையில் வாங்கும் Empty தண்ணீர் பாட்டிலில் எப்படி வாங்குவது அதற்கு பதில் சொல்கிறேன்.
பிளாஸ்டிக் பாட்டிலை 7 வகையாக பிரிப்பார்கள். அதனால் Empty பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் அடிப்பகுதியில் முக்கோண வடிவில் அதில் நம்பர் போட பட்டிருக்கும். அதில் 1,2,4,5 போன்ற நம்பர் போட போடப்பட்டிருந்தால் பயன்படுத்துவதற்கு ஏற்றது.
3,6,7 போன்ற நம்பர் போட பட்டிருக்கும் பாட்டில்களை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் இவையெல்லாம் மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பைப் போன்றவை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்த பாட்டில்களை பயன்படுத்த கூடாது.
அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |