ஏன் கோவிலில் கொடுக்கும் தீர்த்தம் செம்பு பாத்திரத்தில் மட்டும் தருகிறார்கள் காரணம் தெரியுமா.?

Advertisement

தீர்த்தம் கோவில்

கோவில்களில் கொடுக்கும் தீர்த்தம் செம்பு பாத்திரத்தில் மட்டும் கொடுப்பார்கள் கவனித்திருக்கீர்களா.! அது ஏன் இந்த பாத்திரத்தில் மட்டும் கொடுக்க காரணம் என்ன என்று யோசித்திருக்கீர்களா.! அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தை செம்பு பாத்திரத்தில் கொடுக்க காரணம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கோவிலில் கொடுக்கும் தீர்த்தம் செம்பு பாத்திரம்:

தீர்த்தம் கோவில்

கோவில்களில் கொடுக்கும் தீர்த்தத்தை வாங்குவதவதற்கு செல்வ செழிப்போடு இருப்பவர்கள் கூட வரிசையில் நின்று வாங்குவார்கள். ஏனென்றால் அந்த தீர்த்தம் வேறு எங்கும் கிடைக்காது. கோவிலில் மட்டும் தான் கிடைக்கும். அதில் தெய்வீக சக்தி நிறைந்துள்ளது. அதனால் தான் தீர்த்தம் என்று அழைக்கிறோம். அந்த தீர்த்தத்தை நாம் குடிக்கும் போது அது நமக்கு எந்த வகையிலும் தீங்கினை விளைவிக்க கூடாது என்பதற்காக தான் செம்பு பாத்திரத்தில் தருகிறார்கள். புரியவில்லையா நண்பர்களே தெளிவாக பார்க்கலாம்.

ஏன் கோவிலுக்கு செல்லும்போது கோவில் வாசல் படியை தொட்டு கும்பிட்டு செல்கின்றனர் தெரியுமா..?

பொதுவாக தண்ணீர் குழாயிலிருந்து வருகிறது. அந்த தண்ணீரை அடிக்கடி சுத்திகரிக்கப்பட்ட மாட்டார்கள். அதனால் தான் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க சொல்வார்கள். இப்படி கொதிக்க வைத்து குடிக்க முடியாது என்கிறவர்கள் செம்பு குடத்தில் தண்ணீரை வைத்து குடிக்கிறார்கள்.

 செம்பு, பித்தளை, வெள்ளி போன்ற பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைத்தால், உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து உடலுக்கு தேவையான உப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதனால் தான் கோவில்களில் செம்பு பாத்திரத்தில் தீர்த்தம் தருகிறார்கள்.  

இந்த பாத்திரத்தோடு துளசி இலை சேர்வதால் சளி, இருமல், தொண்டை வலி, சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கற்கள், இதயக் கோளாறுகள், மன அழுத்தம், வாய் தொற்று, பூச்சிக்கடி, தலைவலி, தோல் மற்றும் பல் கோளாறுகளுக்கு தீர்வாகவும் இருக்கிறது.

கோவிலுக்குள் செருப்பு போட கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement