கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?

Advertisement

Why Do We Yawn in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த உலகில் பலகோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல இந்த உலகில் இருக்கும் அனைத்து மக்களிடம் இருக்கக் கூடிய பொதுவான பண்பு தான் கொட்டாவி. இது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் என்று அனைவருக்குமே வரும். கொட்டாவி ஏன் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதற்கான காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மனிதனின் தலையில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு முடிகள் வளரும் தெரியுமா.?

கொட்டாவி: 

இந்த கொட்டாவியை வெறும் மூச்சு காற்று என்று கூறலாம். நாம் அதிக மூச்சை உள்ளே இழுத்து அந்த காற்றை வெளியே விடும் போது அந்த காற்று கொட்டாவியாக வருகிறது.

கொட்டாவி பெரும்பாலும் தூக்குவதற்கு முன் அல்லது பின் வரும். அதேபோல கடுமையான வேலை செய்யும் போது அல்லது நாம் சோர்வாக இருக்கும் போது கொட்டாவி வருகிறது.

கொட்டாவி விடுவது என்பது இயல்பான ஒரு விஷயம். மனிதர்கள் மட்டுமில்லை முதுகெலும்பு உள்ள அனைத்து உயிரினத்திற்கும் கொட்டாவி வரும். கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட கொட்டாவி வரும்.

ஒரு மனிதன் 1 நாளைக்கு 20 முறைக்கு மேல் கொட்டாவி விடுகிறான். இந்த கொட்டாவின் நீளம் 6 நிமிடம் வரை நீடிக்கிறது. நமது மூளையின் சில செயல்பாடுகளின் காரணமாக தான் கொட்டாவி வருகிறது.

கொட்டாவி ஏன் வருகிறது..?  

நமது மூளையில் ஏற்படும் வெப்பமானது சாதாரண நிலையை விட அதிகமாக இருப்பதால் கொட்டாவி வருகிறது.

 சில நேரங்களில் மனஅழுத்தம் அதிகமாக இருந்தால் மூளை அதிகளவு வெப்பத்தை வெளியிடுகிறது. அந்த வெப்பத்தை தணிப்பதற்காக தான் கொட்டாவி வருகிறது. நாம் வாயை அகலமாக திறந்து கொட்டாவி விடுவதால் மூளையில் ஏற்பட்ட வெப்பம் தணிந்து அனைத்து நரம்புகளுக்கும் குளிர்ச்சியை தருகிறது.  

அதேபோல ஒருவர் கொட்டாவி விட்டால் அதை பார்ப்பவருக்கும் கொட்டாவி வரும் என்று சொல்வார்கள். அதற்கு காரணம், நாம் அவர்களை பார்க்கும் நமது மூளையில் ஒரு தூண்டுதல் ஏற்படுகிறது. அந்த தூண்டுதல் காரணமாக தான் நமக்கும் கொட்டாவி வருகிறது.

இதனால் தான் மற்றவர்கள் கொட்டாவி விடும் போது நமக்கும் கொட்டாவி வருகிறது.

அதுபோல ஒரு நிமிடத்தில் 1 முறைக்கு மேல் கொட்டாவி வந்தால், அவர்களுக்கு தூக்க பிரச்சனை அல்லது இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த கொட்டாவி வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதி அல்லது குளிர் அதிகம் கொண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிகமாக வருவதில்லை. மிதமான பகுதியில் இருக்கும் மக்களுக்கே கொட்டாவி அதிகம் வருகிறது.

மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Interesting Information
Advertisement