நாய் துரத்துவது ஏன் தெரியுமா.?
வணக்கம் நண்பர்களேஇன்றைய பதிவில் ஒரு அருமையான பயனுள்ள தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது சாலை ஓரங்களில் உறங்கும் நாய்கள் நாம் வாகனங்களில் போகும் பொழுது துரத்தும். இதனால் பலரும் பயந்துபோவதும் உண்டு. அதோடு மட்டுமல்ல இருசக்கர வாகனங்களில் வரும் பொழுது சில நாய்கள் தொடர்ந்து துரத்தி கொண்டே வரும் இதனால் பல பேருக்கு விபத்துகளும் ஏற்படுகின்றன. ஏன் நாய்கள் வாகனங்களை கண்டதும் துரத்துகிறது என்று யோசித்திருக்கிறீர்களா.? மேலும் நாய் ஏன் வாகனங்களை கண்டால் துரத்துகிறது என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
நாய் என்றாலே நம் அனைவருக்கும் பயம். அதிலும் குறிப்பாக வாகனங்களில் செல்லும்போது, தெரு ஓரங்களில் இருக்கும் நாய்கள் காரணமே இல்லாமல் துரத்தும்.நாம் அதனை எதுவும் செய்திருக்க மாட்டோம் . ஆனால், எல்லா நாய்களும் வாகனங்களை கண்டாலே துரத்தும். ஏன் இப்படி செய்கிறது என்று நாம் அனைவருமே யோசித்து இருப்போம். அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கனவில் நாய் வந்தால் என்ன பலன்..! |
பன்றி வாகனத்தில் மோதினால் அந்த வாகனத்தை விற்க வேண்டுமா? |
Why do Dogs Chase Cars and Bikes in Tamil:
நாய்கள் பொதுவாக வாகனங்களை பார்த்ததும் படுத்திருக்கும் நாய் திடீரென்று அந்த வாகனங்களை துரத்த ஆரம்பித்துவிடும். இப்படி துரத்துவதை ஒரு சிலர் வாகனங்களில் ஏதோ தீய சக்தி இருக்கிறது என்று நாய்களில் பார்வைக்கு ஏதோ தெரிகிறது என்று சொல்வார்கள்.
இன்னும் ஒரு சில பேர்கள் இறந்தவர்களின் ஆவி அந்த வாகனத்தில் இருக்கிறது என்றும் இதனால் தான் அந்த வாகனத்தை துரத்துகிறது என்றும் சொல்வார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். இதுபோல் இரவில் வாகனத்தில் செல்லும் பொழுது அவர்கள் அதிகமாகவே பயம் அடைவதும் உண்டு.
நாய்கள் வாகனத்தை துரத்துவதற்கு காரணம் என்ன தெரியுமா.? நம் வீட்டில் இருக்கும் வாகனங்கள் பொதுவாக வெளிப்புறங்களில் நிறுத்தி வைப்போம். அல்லது வீட்டுக்கு பக்கத்தில் இடம் இருந்தால் அங்கு நிறுத்தி வைப்போம். இவ்வாறு வாகனங்களை நிறுத்தி வைக்கும் பொழுது தெரு நாய்களோ அல்லது வீட்டில் வளர்க்கும் நாய்களோ அந்த வாகனத்தில் டயர் பகுதியில் சிறுநீர் கழித்து விடும்.
எனவே அந்த வாகனங்களை எடுத்து செல்லும் பொழுது அந்த நாய்கள் மோப்பம் பிடித்து அதில் நாய் இருக்கிறது என்று அந்த வாகனத்தை துரத்துகிறது. இன்னும் சில காரணம் என்னவென்றால் ஒரு சில வீடுகளில் நாய்குட்டிகளை வளர்ப்பார்கள். இவ்வாறு நாய் வளர்ப்பவர்கள் மேல் ஒரு மனம் இருக்குமாம் இதனாலும் துரத்துகிறது. பொதுவாகவே நாய்களுக்கு அதிகமாக மோப்ப சக்திகள் இருப்பதால், மற்றொரு நாயின் சிறுநீரக வாடையை கண்டதும் துரத்துகிறது, இதனை அறிவியல் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இரவில் நாய், மாடு அழுவது நல்லதா கெட்டதா..! இரண்டில் எது உண்மை..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |