இதற்காக தான் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடுகிறார்களா !

Advertisement

கிருஷ்ணஜெயந்தி ஏன் கொண்டாடுகிறோம்

கிருஷ்ணஜெயந்தி என்றாலே நம் அனைவரும் என்ன செய்வோம் வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவினால் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்கிறோம். வீட்டின் வாசல் முதல் பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தையின் கால் தடங்களை பதிக்கிறோம். கிருஷ்ணஜெயந்தி அன்று நம் வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணன் போல் அலங்கரித்து கொண்டாடுவோம். ஆனால் ஏன் அவ்வாறு செய்கிறோம் என்று நம்மில் பலபேர் அறியாத ஓன்று. எதற்காக கிருஷ்ண ஜெயந்தி அன்று இதனை செய்கிறோம் என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கிருஷ்ணன் பிறந்த வரலாறு:

கிருஷ்ணஜெயந்தி ஏன் கொண்டாடுகிறோம்

கிருஷ்ணன் மதுரா நகரில் தேவகி– வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் பிறந்த இடம் சிறைச்சாலை. சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ப்பு தாய் யசோதையால் வளர்க்கப்பட்டார்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாப்படும் நாள்:

இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ணஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணன் உபதேசித்த ஆத்ம குணங்கள் அநேகம் – அவற்றில் சில:

எல்லோரிடமும் பகை இல்லாமல் இருக்க வேண்டும்.
உடல் மீது ஆசை வைக்க கூடாது.
தனக்கு தீங்கு செய்தவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.
சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க வேண்டும்.
சோதனைகள் வரும்போது சகித்துக் கொள்ள வேண்டும்.
கிடைத்ததை கொண்டு திருப்பதி அடைய வேண்டும்.
ஆடம்பரம் கூடாது.
அகிம்சையை கடை பிடிக்க வேண்டும்.
பிறர் மனம் துன்புறுமாறு பேச கூடாது.
அடக்கமாய் இருக்க வேண்டும்.
பொறுமையுடன் இருக்க வேண்டும்.
தெளிந்த உள்ளம் வேண்டும்.

கிருஷ்ணனுக்கு கண்ணா முகுந்தா என்று பெயர் வர காரணம்:

கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். கிருஷ்ணனை “கண்ணா’’, ‘‘முகுந்தா” என்று பல பெயர்களில் அழைப்போம். ஏனென்றால் கண்ணைப்போல் காப்பவன் என்றும், முகுந்த என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து முக்தி அளிப்பவன் என்று நம்புகிறோம் அதனால் தான் கிருஷ்ணனை இவ்வாறு அழைக்கிறோம்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் காரணம்:

கிருஷ்ணஜெயந்தி என்பது கிருஷ்ணரின் அவதார நன்னாள். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி நாளில், ரோகிணி நட்சத்திரத்தில் பகவான் கிருஷ்ணரின் திரு அவதாரம் நிகழ்ந்ததாக தெரிவிக்கிறது புராணம். எனவே , கிருஷ்ணர் பிறந்த அந்நாளை தான் கிருஷ்ணஜெயந்தி என்று நம் வீடுகளில் விமர்சயாக கொண்டாடுகிறோம்.

வீடுகளில் கிருஷ்ணரின் திருவடிகள் ஏன் ?

சிறுவயதில் கிருஷ்ணர், யார் வீட்டிலாவது உறியில் வெண்ணெய் வைத்திருந்தால் அதனை கல்லால் அடித்து அந்த வெண்ணெயெய் சாப்பிட்டு விடுவார். அவர் சாப்பிடுவதற்காக உடைக்கப்பட்ட உறியில் இருந்து வெண்ணெய் கீழே சிந்தி இருக்கும். அப்பொழுது யாராவது வந்தால் கிருஷ்ணர் கீழே சிந்தியுள்ள வெண்ணெய்யை மிதித்து கொண்டு ஓடும் பொழுது கிருஷ்ணரின் பாதஅச்சு வீடு முழுவதும் அப்படியே பதிந்து இருக்கும். அந்த உறியை உடைத்து வெண்ணையை சாப்பிட்டது கண்ணன் என எல்லோர்க்கும் தெரிந்துவிடும். ஆனால், கண்ணனின் குறும்புகளையும், சேட்டைகளையும் கோபியர் உள்பட எல்லோரும் ரசித்தார்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil

 

Advertisement