சிவப்பு நிறம் ஏன் எச்சரிக்கை ஒளியாக இருக்கிறது காரணம் தெரியுமா..?

Reason For The Red Color Being A Warning Light in Tamil

Reason For The Red Color Being A Warning Light in Tamil

அன்பான நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் சிவப்பு நிறம் ஏன் எச்சரிக்கை ஒளியாக பார்க்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? நாம் பார்க்கும் பெரும்பாலான இடங்களில் சிவப்பு நிறம் எச்சரிக்கை ஒளியாக பார்க்கப்படுகிறது. எத்தனையோ நிறங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சிவப்பு நிறம் மட்டும் ஏன் எச்சரிக்கை ஒளியாக இருக்கிறது. ஏன் சிவப்பு நிறம் மட்டும் எச்சரிக்கை ஒளியாக இருக்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசிக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே அதற்கான காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..!

சாலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் ஏன் உள்ளன..? காரணம் தெரியுமா..?

சிவப்பு நிறம் ஏன் எச்சரிக்கை ஒளியாக இருக்கிறது..?

Reason For The Red Color Being A Warning Light in Tamil

நம் அன்றாட வாழ்க்கையில் சிவப்பு நிறத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. நாம் வெளியில் செல்லும் போது பார்த்திருப்போம். சாலையில் இருக்கும் போக்குவரத்து சிக்னலில் இருந்து ஆம்புலன்ஸ், இரயில் நிலையத்தில் இரயிலை நிறுத்த பயன்படுத்தப்படும் கொடி மற்றும் நாம் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனம் என்று எல்லாவற்றிலும் சிவப்பு நிறம் இருக்கிறது.

நம் நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே சிவப்பு நிறம் எச்சரிக்கை ஒளியாக பார்க்கப்படுகிறது. ஏன் அப்படி சிவப்பு நிறம் உலகம் முழுவதும் எச்சரிக்கை ஒளியாக இருக்கிறது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இங்கு பார்ப்போம்.

சிவப்பு நிறம் நம் உடலில் இருக்கும் இரத்தத்துடன் தொடர்பானதாகவும் உள்ளுணர்வை அதிகரிக்க செய்வதாகவும் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த சிவப்பு நிறம் அபாயத்தை பெரிதும் பிரதிபலிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

 இந்த சிவப்பு நிறமானது மழை, பனி, வெயில், இருள் ஆகியவைகளில் சிக்காமல் நீண்ட தூரத்திற்கு ஊடுருவி பாயும் தன்மையை கொண்டுள்ளது. 

இந்த சிவப்பு நிறத்தில் அதிக அடர்த்தியான கதிர்கள் வெளிப்படுவதால் தான் இது எச்சரிக்கை ஒளியாக பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு நிறம் உணர்ச்சிகளை தூண்ட கூடிய பண்புகளை கொண்டுள்ளது.

மனிதர்கள் நெருப்பு, இரத்தம் என சிவப்பு நிறத்தை எதிர்மறையான மற்றும் அபாயகரமான உணர்ச்சிகளுடன் தொடர்புபடுத்தி கொள்கிறார்கள்.

 மனிதர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியக் ஒளி எது என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக The Electromagnetic Spectrum என்ற மின்காந்த நிறமாலையில் மனிதர்களின் கவனத்தை ஈர்க்கும் நிறம் எது என்று ஆராய்ச்சி செய்த போது, சிவப்பு நிற ஒளியின் அலை நீளம் 620 முதல் 750 வரை இருந்தது. அதனால் இது மனிதனின் கவனத்தை ஈர்க்கும் நிறம் என்று சொல்லபடுகிறது. 

அதுபோல இது அதிகமான அலை நீளத்தையும் அதேசமயம் குறைவாக சிதறும் தன்மையை கொண்டுள்ளது. அதனால் தான் சிவப்பு நிறம் எல்லா இடங்களிலும் எச்சரிக்கை ஒளியாக பார்க்கப்படுகிறது.

சாலைகளில் மூன்று விளக்குகள் உணர்த்தும் செய்திகள் உங்களுக்கு தெரியுமா.?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil