கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Sea Water Salty Reason in Tamil

வணக்கம் அன்பார்ந்த நேயர்களே..! இன்றைய பதிவில் மூலம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த உலகில் பல வகையான நீர் நிலைகள் உள்ளன. ஆறுகள், ஏரிகள், குளங்கள், அருவிகள், நதிகள், கடல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

நாம் வாழும் பூமி நீரினால் சூழப்பட்டுள்ளது என்று கூறலாம். பூமியின் பாதி பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமே எத்தனை நீர்நிலைகள் உள்ளன என்று உங்களுக்கே தெரியும். எல்லா நீர்நிலைகளையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். எல்லா நீரும் கடலில் தான் சேருகின்றன.

இருந்தாலும் மற்ற நீரை காட்டிலும் கடல் நீர் மட்டும் ஏன் உப்பாக இருக்கிறது. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதற்கான காரணத்தை என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நியூஸ் பேப்பரில் உள்ள நான்கு வண்ண புள்ளிகள் சொல்லும் கதை உங்களுக்கு தெரியுமா..?

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது..? 

கடல் மிக பெரிய பரப்பளவை கொண்டுள்ளது. கடலின் நீளத்தை அளவிட முடியாது. கடலில் உள்ள நீர் தான் எல்லா இடங்களுக்கும் செல்கிறது. மற்ற நீரை காட்டிலும் கடல் நீர் மட்டும் ஏன் உப்பாக இருக்கிறது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நிலத்தில் விழும் மழை நீரானது வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் சிறிதளவு கலக்கின்றது. அதனால், மழைநீர் சிறிதளவு கார்பானிக் அமில தன்மையை அடைகின்றது. அமிலத்தன்மை உடைய மழை நீரானது பாறைகளின் மீது கடந்து வரும் போது பாறைகளை கரைந்து செல்கிறது.

இந்த நிகழ்வின் போது ஏற்படும் வேதியியல் மாற்றத்தின் காரணமாக மின்னூட்டம் பெற்ற அணுத் துகள்கள் உருவாகின்றன. இந்த அணுத்துகள்கள் அயனிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த அயனிகள் மழை நீருடன் வெள்ளத்தில் கலந்து மற்ற நீர்நிலைகளின் மூலம் கடலில் கலக்கின்றன. இந்த அயனிகள் கடலில் தங்கி விடுகின்றன.

இந்த அயனிகளில் 90% சோடியம் மற்றும் குளோரைடு அதிகளவில் காணப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் அவை அதிகளவு உப்பு தன்மையை கொண்டுள்ளன.

இந்த அயனிகள் கடலில் தங்கி விடுவதால் தான் கடல் நீர் உப்பாக உள்ளது. மேலும், கடல் நீர் ஆவியாகும் போது கடலில் உள்ள உப்பு வெளியேறுவதில்லை. அதனால் தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement