பொருட்களின் விலை Rs.99, 499, 999 என்று ஏன் வைக்கப்படுகிறது காரணம் தெரியுமா..?

Advertisement

பொருட்களின் விலை

நாம் எப்போதும் நமக்கு தேவையான பொருட்களை கடைகளில் பார்த்து பார்த்து அது எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி தரமான பொருட்களாக தான் வாங்குவோம். அதும் விழாக்காலம் என்றால் சொல்வே வேண்டாம். சாதாரணமான பொருட்கள் கூட அதிக விலையில் தான் விற்கும். அப்படி இருக்கும் போது சில பொருட்கள் மட்டும் Rs.99, 499, 999 மற்றும் 9999 என்ற விலையினை கொண்டிருக்கும். நமக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. நமக்கு என்ன பொருட்கள் தேவையோ அதை மட்டும் வாங்கி கொண்டு வந்து விடுவோம். ஆனால் Rs.99, 499, 999 மற்றும் 9999 இதுபோன்ற குறிப்பிட்ட விலையினை மட்டும் வைப்பதற்கு சில காரணமும் இருக்கிறது. அது என்ன காரணம் எதனால் அப்படி விலை வைக்கப்டுகிறது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

Reason For Prices End in 99:

Reason For Prices End in 99

ஒரு பொருள் சந்தையில் புதிதாக விற்கப்படுகிறது என்றால் அதனுடைய விலை 100, 500 மற்றும் 1000 ரூபாய் இது போன்ற விலைகளில் கூட நிர்ணயிக்கலாம்.

ஆனால் இது மாதிரி எந்த நிறுவனங்களும் விலை நிர்ணயிப்பது இல்லை. அனைத்து நிறுவனங்களும் புதிதாக வந்த அந்த பொருளை Rs. 99, 499, 999 இது போன்ற விலை பட்டியலில் நிர்ணயிக்கிறது.

இதில் ஒரு சிலர் யோசிக்கலாம் இந்த 1 ரூபாயில் அவர்களுக்கு என்ன வரப்போகிறது அதற்கு 100 ரூபாய் என்றே விற்பனை செய்யலாம் என்று. அப்படி நாம் 1 ரூபாய் தானே என்று நினைப்பதில் ஒரு Marketing இருக்கிறது.

அதற்கான காரணம் என்னவென்றால் புதிதாக ஒரு பொருள் சந்தைக்கு அறிமுகம் ஆகும் போது அதனுடைய விலை Rs.100, 500 மற்றும் 1000 என இதுபோல நிர்ணயிக்கப்பட்டு இருந்தால் அதை வாங்கும் மக்கள் இதனை பெரிய தொகையாக நினைப்பார்கள்.

அதே Rs.99, 499 மற்றும் 999 என்று இதுபோன்ற விலை நிர்ணயிக்கும் போதும் மக்கள் அதை சொல்லும் போதும் சரி அல்லது அதை வாங்கும் போதும் சரி விலை குறைவு என்ற ஒரு எண்ணம் வந்து விடும்.

அதுமட்டும் இல்லாமல் Rs.99 என்ற பொருளை நாம் வாங்கும் போது மீதம் உள்ள அந்த 1 ரூபாயை யாரும் கடைக்காரரிடம் கேட்க மாட்டார்கள். இவை அனைத்தும் ஒரு விதமான Marketing என்று சொல்லப்படுகிறது.

எம்ஐடி மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம் இரண்டும் ஒன்றாக சேர்ந்து விலை பட்டியலை பற்றி ஆய்வு செய்த போது ஒரு பொருள் 319, 399 மற்றும் 400 என்ற விலையில் இருந்தால் மக்கள் அனைவரும் இதில் 399 ரூபாய் என்ற விலையில் உள்ள பொருளை தான் விரும்புகிறார்கள் என்று தெரியவந்தது. ஏனென்றால் இதில் 399 விலையில் உள்ள பொருள் தான் அதிகமாக விற்கப்பட்டிருக்கிறது.

அப்போது தான் தெரிந்தது இதற்கு பின் இருக்கும் Marketing பற்றி.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement