வடக்கு திசையில் தலை வைத்து படுக்கலாமா
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதா கெட்டதா என்பதை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே ஒரு சராசரி மனிதன் எட்டு மணி நேரம் வரையும் தூங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எல்லாரும் எட்டு மணி நேரம் தூங்குவதே இல்லை குறைவாகத் தான் தூங்குகிறோம். இப்படி நாம் தொடர்ந்து செய்வதனால் உடலுக்கும் பாதிப்பும் ஏற்படுகிறது. அப்படி நம் குறைவாக தூங்கும் பொழுது சரியான திசையில் தூங்குவதுதான் மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதா என்று நம் பதிவில் படித்து அறியலாம் வாங்க.
தூங்கும் போது எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும் தெரியுமா |
ஆன்மிகம் பூர்வமான உண்மைகள்:
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் வடக்கில் தலைவைத்து படுப்பது நல்லது இல்லை என்பதற்கு ஏற்ப கடவுளுடைய வழிபாட்டிற்கும், குரு உபதேசம் பெறுவதற்கும் ஏற்ற திசை என்பதால் கடவுளை அவமதிப்பதாக இருக்கும் என்பதால் அந்த திசையில் தலை வைத்து படுக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
அதுபோல பூஜை வழிபாடுகளுக்கும் வடக்கு திசை உகந்ததாக இருப்பதாலும் வடக்கில் தலை வைத்து படுப்பது நல்லது அல்ல என்றும் சொல்லப்படுகிறது.
வடக்கில் தலை வைத்து படுத்தால் பழிச்சொல்லுக்கு ஆளாகி விடுவார்கள் அதனால் அந்த திசையில் படுக்க கூடாது என்று சொல்லப்படுக்கிறது.
வடக்கு திசை என்பது குபேரர் சாமிக்கு உகுந்த திசை என்பதால் குபேரர் சாமியை அவமதிப்பதாகவும் மற்றும் அவருடைய அருள் கிடைக்காமல் போகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
வடக்கில் தலை வைக்கும் பொழுது கால் தென்திசையில் இருக்கும். தென் திசையானது எமனுக்கு உகந்த திசை என்பதால் எமனை அவமதிப்பதாக ஆகிவிடும்.
அறிவியல் பூர்வமாக வடக்கில் தலை வைத்து படுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்:
காந்த ஈர்ப்பு சக்தி வடக்கு திசையில் அதிகம் இருப்பதால் வடக்கில் மின் அதிர்வு தாக்கம் அதிகம் இருப்பதால் தலைவைத்து படுக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படும்.
பூமியில் வடக்கு திசையில் நேர் மின்னோட்டம் இருப்பதால் தலையில் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே ஒரே துருவங்களில் படுக்கும் பொழுது மின்னோட்டங்களுக்கு இடையே இடையூர்கள் ஏற்பட்டு உடலில் ஆற்றல்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே தெற்கு, கிழக்கு பகுதில் தலை வைத்துப்படுப்பது நல்லது. ஏனென்றால் தெற்கு, கிழக்கு பகுதில் சரியான அளவு ஈர்ப்பு சக்திகள் இருப்பதால் தூங்கி எழும் பொழுது உடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சி மூலம் சொல்லப்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |