இப்படி மட்டும் Petrol Diesel Fill பண்ணாதீங்க!

Advertisement

Don’t Fill Petrol Diesel Just Like this!

இப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் வண்டி என்பது மிக அவசியமான ஒன்றாகும். கடன்கள் பல இருந்தாலும் வண்டி வாங்குவது என்று முடிவெடுத்தால் அதனை உடனே வாங்கிவிடுவார்கள். வண்டி வாங்குவது பெரிதல்ல அதற்கான சாப்பாடு அதாவது பெட்ரோல்/ டீசல் போடுவதில்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் Petrol Diesel விலையும் உச்சத்தை எட்டுகிறது. அப்படி பார்த்து பார்த்து நாம் போடும் Petrol Diesel-லில் கூட ஊழல் நடக்கிறதாக மக்கள் நம்புகிறார்கள்.

இதில் மிகவும் நம்ப படும் ஒன்று தான் இந்த round figure அதாவது சுற்று எண்ணிக்கை, round figure என்றால் என்ன, என்பதே சில பேருக்கு தெரியாமல் இருக்கும். நாம் பெட்ரோல் போடும்பொழுது 1 லிட்டர் அல்லது 1/2 லிட்டர் என்று போடாமல் ரௌண்டாக 100 அல்லது 200-கு நமது tank-ஐ நிரப்புவோம், இதை தான் round figure என்று சொல்வார்கள்.

2024-ல் லிட்டருக்கு 10 ரூபாய் பெட்ரோல்-டீசல் விலை குறையுதா?

Why should you not buy petrol as round figured

இந்தியாவில், 100, 200 அல்லது 300 ரூபாய் போன்ற ஒவ்வொரு round figure அதாவது சுற்று எண்ணிக்கை எண்ணுக்கும் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு ஒப்பீட்டு பார்த்தால் குறைந்த அளவே எரிபொருளை அந்தந்த எரிபொருள் பங்க்குகள் தங்கள் அமைப்புகளை மாற்றியமைக்கின்றன என்று பலர் நம்புகிறார்கள். 

அதுமட்டுமில்லாமல் நாம் 105, 215 அல்லது 325 போன்ற ஓற்றைப்படை எண்களை பயன்படுத்தி பெட்ரோல்/ டீசல் வாங்கினால் நமக்கு முழுவதுமாக நாம் கொடுத்த காசுக்கு பெட்ரோல் கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள்.

அது என்னப்பா ஊராட்சி மணி?

அது எவ்வளவு துல்லியமானது என்று தெரியவில்லை என்றாலும், இதுபோல் நடக்கும் என்றுசெய்திகள் கேள்விபட்டிருக்கின்றோம். இது உண்மையாக இருந்தால், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் 50 மில்லி லிட்டர் எரிபொருளைச் சேமித்தால், உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார் என்பதைக் கவனியுங்கள் – அது சந்தேகத்திற்கு இடமின்றி கோடிகளில் இருக்கும்.

இது உண்மை தானா என்று பார்க்கப்போனால் அந்த கருவிகளை சேதப்படுத்தி நம்மால் சோதித்து பார்க்கமுடியாது. அதனால் உண்மை என்னவென்று நாம் முதலில் அறியவேண்டும், இந்த சாதனங்கள் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களின் கண்காணிப்பில் உள்ள மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் நாம் எவ்வளவு பணம் கொடுக்கின்றோமோ அதற்கேற்றவாறே பெட்ரோல் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

உங்கள் பணத்தை இதுபோன்ற தேவைகளுக்கு பயன்படுத்தும்போதும் கவனமாக இருங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement