Why Tears Come When Cutting Onions in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப் போகிறோம். நாம் அன்றாடம் சாப்பிட கூடிய உணவுகளில் சேர்த்து சமைக்கும் ஓர் உணவு பொருள் தான் வெங்காயம். இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
வெங்காயம் சேர்த்து சமைக்காத உணவுகளே இருக்க முடியாது. அதுபோல நாம் வெங்காயம் உரிக்கும் போது நம் கண்ணில் நீர் வருகிறது. அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் வெங்காயம் உரிக்கும் போது ஏன் கண்ணில் நீர் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பசிக்கும் போது ஏன் வயிறு கத்துகிறது தெரியுமா..?
வெங்காயம் வெட்டும் போது கண்ணில் நீர் வரக் காரணம் என்ன..?
நாம் அன்றாடம் சமைக்கும் போது எத்தனையோ காய்கறிகளை வெட்டுகின்றோம். இருந்தாலும் ஏன் வெங்காயம் வெட்டும் போது மட்டும் கண் கலங்குகிறது. அதற்கான காரணம் தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வெங்காயத்தில் இருக்க கூடிய சல்பெனிக் என்ற அமிலம் தான் நம் கண்களில் நீர் வரக் காரணம். திரவ வடிவில் இருக்கும் இந்த சல்பெனிக் என்ற அமிலமானது, நாம் வெங்காயம் வெட்டும் போது காற்றுடன் கலந்து ஆவியாக மாறுகிறது. இந்த சல்பெனிக் என்ற அமிலமானது எரிச்சல் ஊட்டும் பண்புகளை கொண்டுள்ளது. இந்த அமிலமானது காற்றில் கலந்து நம் கண்களில் வந்து சேரும் போது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் இருந்து நீர் வருகிறது.இதன் காரணமாக தான் வெங்காயம் வெட்டும் போது நம்மை அறியாமல் கண்ணில் இருந்து நீர் வருகிறது.
அதேபோல, வெங்காயத்தில் இருக்கும் இந்த சல்பெனிக் என்ற அமிலமானது காற்றில் கலந்து வருவதால் தான், மற்றவர்கள் வெங்காயம் வெட்டினாலும் அதை பார்த்து கொண்டிருக்கும் நமக்கும் கண்ணில் நீர் வருகிறது.
வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..! |
சின்ன வெங்காயம் இத்தனை நோய்களுக்கு மருந்தா..? |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |