சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று சொல்ல காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா.?

Don't Eat After Bath in Tamil

Don’t Eat After Bath in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்…🙏 இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் அன்றாடம் செய்யும் பழக்கங்களில் ஓன்று குளிப்பது. சிலர் குளித்த பின் சாப்பிடுவார்கள். அதுபோல சிலர் சாப்பிட்டு குளிப்பார்கள். அந்த நேரத்தில் பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது என்று சொல்வார்கள். அதை நாம் கேட்டிருப்போம். சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது என்று சொல்வதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது. அது உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது என்று சொல்வதற்கு பின்னால் இருக்கும் காராணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ சாப்பிட்ட உடனே இதை மட்டும் மறந்தும் கூட செய்யாதீர்கள்..!

சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று சொல்ல காரணம் என்ன..? 

நாம் சாப்பிட்ட உடன் சில செயல்களை செய்ய கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை நாம் கேட்டிருப்போம். அப்படி செய்யக் கூடாத செயல்களில் ஓன்று தான் சாப்பிட்டவுடன் குளிப்பது. ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று அனைவருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் குளிக்கும் போது நம் உடலில் இருக்கும் அனைத்து செல்களும் புத்துணர்ச்சி அடைகிறது. அந்த நேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.

இதுபோல நம் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும் போது, நம் உடலில் உள்ள செல்களானது ஆற்றலுடனும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. அதனால் தான் நாம் குளித்தவுடன் அதிகளவு பசி எடுக்கிறது.

 நொதிகள் தான் நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க செய்கிறது. இந்த நொதிகள் உடல் வெப்பமாக இருந்தால் தான் சுரக்கும்.  நாம் சாப்பிட்டவுடன் குளிப்பதால் நம் உடல் குளிர்ச்சி அடைகிறது. இதனால் நொதிகள் உடலில் சுரப்பதில்லை.  இதன் காரணமாக உடலில் செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. சாப்பிட்ட உடன் குளிப்பதால் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாமல் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்துகிறது.  

இதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அதுவே, நீங்கள் குளித்த பிறகு சாப்பிடுவதால், உடலானது உணவில் உள்ள மொத்த சத்துக்களையும் பெற்று உடலுக்கு தேவையான மொத்த ஆற்றலையும் கொடுக்கிறது.

இதனால் தான் சாப்பிட பிறகு குளிக்க கூடாது என்று சொல்கிறார்கள்.

சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 7 விஷயங்கள்..!

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information