தீபாவளி அன்று புது ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது ஏன் தெரியுமா?

Why wear new clothes and burst crackers on Diwali

Why Wear New Clothes and Burst Crackers on Diwali

வணக்கம் நண்பர்களே இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் பண்டிகையில் தீபாவளியும் ஒன்று. தீமை அழிந்து, நன்மை பிறந்த தினமாக தீபாவளி பாண்டியை கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி அன்று புதிய ஆடைகள் அணிவது ஏன்? பட்டாசு வெடிப்பது ஏன்? என்று உங்களுக்கு தெரியுமா..? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து அதனை தெரிந்து கொள்ளுங்கள்.

தீபாவளி அன்று புது ஆடைகள் அணிந்து, பட்டாசு வெடிப்பது ஏன் தெரியுமா?

தீபாவளி அன்று காலை எழுத்து எண்ணெய் வைத்து குளித்துவிட்டு புதிய ஆடைகளை அணிந்து கடவுளையும், பெரியவர்களையும் வணங்குகிறோம்.

இந்த நாளில் புதிய ஆடைகள் அணிந்து, பட்டாசு வெடிப்பதற்கான காரணம் என்ன என்பதை இப்பொழுது அறிந்திடுவோம்.

பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை செய்த போது, இந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என நரகாசுரன் வேண்டியதாக புராணங்களில் கூறப்படுகிறது.

நரகாசுரனின் வேண்டுதலின்படியே தீபாவளி தினத்தன்று அனைவரும் புதிய ஆடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதினால் உடல் துமையாகி நமது மனதில் உள்ள மாசுகளை களைத்து இறைவனை பிராத்தனை செய்கின்றோம்.

தீய குணங்களை மனதில் இருந்து நீக்கி நற்குணங்களை பெறுவதே தீபாவளி அன்று புதிய ஆடைகள் அணிவதன் நோக்கமாகும்.

தீபாவளி என்றே தீபங்களின் வரிசை என்று பொருள் கடவுளின் ஆசிர்வாதத்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சியான தீபங்களை ஏற்றி வழிபடுகிறோம்.

தீபாவளி அன்று இனிப்புகளை கடவுளுக்கு படைத்து, அனைவரும் மகிழ்கிறோம், எல்லோரும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை செய்கிறோம்.

பட்டாசு வெடிப்பதன் நோக்கம் பேராசை, பொறாமை, கோபம், கர்வம் ஆகிய அனைத்து தீய குணங்களும் பட்டாசை போல் பொசுங்கி நற்குணங்களை பெற வேண்டும் என்பதாகும்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil