Wooden Bero vs Steel Bero Which is Better in Tamil
வீட்டை அழகாக காட்டுவதே வீட்டில் உள்ள பொருட்கள் தான். இதனை பார்த்து பார்த்து வாங்குவார்கள். ஒவ்வொரு பொருட்களின் தரம், நிறம், விலை போன்றவற்றை பார்த்து வாங்குவார்கள். வீட்டில் உள்ள முக்கியமான ஒன்று பீரோல். இவை இல்லாமல் எந்த வீடும் இருக்காது. இதில் மர பீரோல், இரும்பு பீரோல் போன்ற வகைகள் இருக்கிறது. இந்த இரண்டு பீரோவில் எது சிறந்தது என்று ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் மரபீரோல், இரும்பு பீரோல் இவற்றில் எது சிறந்தது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மரபீரோல்:
மர பீரோலை தான் பெரும்பாலனவர்கள் விரும்ப கூடிய ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இதில் நாம் கேட்கின்ற டிசைனை செய்து கொடுப்பார்கள். விலை அதிகமானதாக இருக்கும்.
மேலும் மழைக்காலம் வந்துவிட்டால் மரத்தால் ஆன பொருட்கள் ஈரப்பதத்தால் பூசணம் பிடித்து விடும். பூசணம் பிடித்தால் துணிகள் எல்லாம் வீணாகி விடும்.
இதனை வைப்பதற்கில்லை இடம் அதிகமாக தேவைப்படும். அதே போல் நாம் வாங்கி வந்தவுடன் வீட்டில் வைப்பதற்கு ஆட்கள் நிறைய தேவைப்படும். ஏனென்றால் மரபீரோல் கனமாக இருக்கும்.
உங்கள் வீட்டு பீரோவில் இந்த பொருட்களை மட்டும் வைத்துவிடாதீர்கள்..!
இரும்பு பீரோல்:
இரும்பு பீரோலானது விலை மலிவாக இருக்கும். எல்லா மக்களும் வாங்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நிறைய டிசைன்கள் இருக்கும்.
இரும்பு பீரோலானது மழைக்காலம், வெயில் காலம் என்றாலும் பிரச்சனையில்லை. எல்லா காலத்திற்கும் ஏற்றவையாக இருக்கும். இதனுடைய ஆயுள் என்பது நீங்கள் வைத்திருப்பதை பொறுத்து அமைகின்றது.
இதில் தண்ணீர் பட்டால் துரு பிடித்துவிடும், இதனால் பீரோவில் ஓட்டை விழுந்து அதனுடைய ஆயுள் குறைய ஆரம்பிக்கும்.
மேலும் இதனை பராமரிப்பது ஈசியாக இருக்கும். இதனை வைப்பதற்கு பெரிதாக இடம் தேவைப்படாது. உங்களின் வீட்டை பொறுத்து சிறிய பீரோ, பெரிய பீரோ என்று வாங்கி கொள்ளலாம்.
மேல் கூறப்பட்டுள்ள விஷயங்களை வைத்து பார்க்கும் போது விலை மலிவு என்று பார்த்தால் இரும்பு பீரோ வசதியாக இருக்கும். அதே நேரத்தில் விலை அதிகமாக இருந்தால் ஆயுள் வேண்டும் என்றால் மர பீரோல் ஏற்றவையாக இருக்கும்.
பீரோவில் இப்படி துணியை அடுக்கி வைத்தால் 10 நபரின் துணிகளை கூட வைக்கலாம்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |