World Consumer Rights Day in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல இன்று நம் பார்க்கப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி உங்களுக்கு நுகர்வோர் என்றால் என்ன.? நாம் யாரை நுகர்வோர் என்று சொல்கிறோம் தெரியுமா..? பொதுவாக நாம் அனைவருமே இந்த நுகர்வோர் என்ற வார்த்தையை அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
இந்த நுகர்வோர் என்ற பெயர் எப்படி வந்தது, யாரை நுகர்வோர் என்று நாம் சொல்கிறோம், இதுபோல நிறைய கேள்விகள் நமக்குள் இருக்கும். அப்படி இருக்கும் கேள்விகளுக்கு நம் பொதுநலம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே இன்றைய பதிவின் வாயிலாக நுகர்வோர் என்றால் என்ன..? உலக நுகர்வோர் உரிமைகள் தினம் எப்போது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
நுகர்வோர் என்றால் என்ன..?
நுகர்வோர் என்பது யார் ஒருவர் காசு கொடுத்து பொருட்களை வாங்குகிறாரோ அவரை தான் நுகர்வோர் என்று சொல்கிறார்கள். அதாவது நுகர்வோர் என்பவர் தனது தேவைக்காக எந்த ஒரு பொருளையும் காசு கொடுத்து பெறும் ஒரு நபர் என்று சொல்லப்படுகிறது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இப்போது நீங்கள் ஒரு கடை வைத்திருக்கிறீர்கள். அந்த கடைக்கு ஒருவர் வந்து பொருட்களை வாங்கி சென்றால் அவரை நுகர்வோர் என்று சொல்ல வேண்டும். அதாவது நுகர்வோரை ஆங்கிலத்தில் Consumer என்று சொல்லலாம்.
நீங்கள் இந்த Consumer என்ற வார்த்தையை அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனவே Consumer என்பது நுகர்வோர் என்று சொல்லப்படுகிறது.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் எப்போது..?
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது. இது 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய John F Kennedy என்பவர், நுகர்வோர் உரிமைகள் குறித்து ஆற்றிய உரையால் இந்த நாள் கொண்டுவரப்பட்டது. இவர் அமெரிக்க ஜனாதிபதியாகவும் முன்னாள் அமெரிக்க அதிபராகவும் இருந்தவர்.
அதுபோல நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதல் நாட்டுத் தலைவராக John F Kennedy கணிக்கப்படுகின்றார். அதன் பிறகு Consumers International -ன் தொழிலாளியான Anwar Fazal என்பவர், பின்னர் இந்த நாளை உலக நுகர்வோர் உரிமைகள் தினமாக முன்மொழிந்தார்.
இந்த உலக நுகர்வோர் உரிமைகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், இது பொது மக்களின் நுகர்வோர் உரிமைகளை அங்கீகரித்து அவர்கள் மீது செயல்படும் நாள் ஆகும். மேலும், இது ஒரு நுகர்வோர் என்ற முறையில் ஒவ்வொரு நபரின் இன்றியமையாத வெளிப்பாடாகும். ஏனெனில் அவர்கள் அனைவரையும் பாதிக்கும் நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடும் நோக்கம் என்ன..?
நுகர்வோரின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தவும், நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அதேபோல நம் இந்தியாவில், டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் 1986 ஆம் ஆண்டு இதே நாளில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |