வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உலக சுற்றுச்சூழல் தினம் 2024 கருப்பொருள்

Updated On: June 4, 2024 3:25 PM
Follow Us:
World Environment Day 2024 Theme in Tamil
---Advertisement---
Advertisement

உலக சுற்றுச்சூழல் தினம் 2024 கருப்பொருள் | World Environment Day 2024 Theme in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உலக சுற்றுசூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 05 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுசூழல் தினம் புதன் கிழமை வருகிறது. இந்த வருடத்தின் உலக சுற்றுச்சூழல் தினம் 2024 கருப்பொருள் (World Environment Day 2024 Theme) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு நம் அனைவரிடமும் இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நம் அனைவரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சுற்றுசூழல் தினம் முதன் முதலில் 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகள் ஒன்றிணைந்து, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நாள் வேண்டும் என்று முடிவு செய்தது.  ஜூன் 5 ஆம் தேதி ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகளின் மாநாடு நடந்தது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 1973 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 05 ஆம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை

உலக சுற்றுச்சூழல் தினம் 2024 கருப்பொருள்:

உலக சுற்றுச்சூழல் தினம் 2024 கருப்பொருள்

உலகம் தற்போது எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சரி செய்வதற்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 05 ஆம் தேதி அன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள்உள்ளது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் 2024 கருப்பொருள் பின்வருமாறு:

2024 உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள்  ‘நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு’ என்பதாகும். ஆங்கிலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள்  ‘Land Restoration, Desertification and Drought Resilience’ ஆகும்.  2023 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முடியடி’ என்பது ஆகும்.

1973  ஆம் ஆண்டில் முதன் முதலில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் Only One Earth  ஆகும்.

நாம் அனைவரும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை அறிந்து, வரும் தலைமுறைக்கு நமது பூமியைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now