World Health Day Theme List in Tamil
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் உலக சுகாதார தினம் கருப்பொருள்களளை விவரித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 07 ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் உலக சுகாதார தினம் ஒவ்வொரு கருப்பொருளை கொண்டுள்ளது. அவற்றின் கருப்பொருள்கள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆனால், அதனை பற்றி நமக்கு தெரியாது. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் இந்த வருடம் மற்றும் முந்தைய வருடத்திற்கான உலக சுகாதார தினத்தின் கருப்பொருளை கொடுத்துள்ளோம்.
உலக சுகாதார தினம் என்றால் என்ன மற்றும் அவை ஏன் முக்கியம்..
World Health Day Theme 2025 in Tamil:
2025 ஆம் ஆண்டின் உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் ஆரோக்கியமான தொடக்கங்கள், ஆரோக்கியமான எதிர்காலம்.
இந்த கருப்பொருள் எதை குறிக்கிறது என்றால் தாய் கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை உள்ள உள்ள காலமான ஒரு வருடத்தை உணர்த்தும் கருப்பொருளாக இருக்கிறது.
தாய் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்யமான கர்ப்பம் மற்றும் ஆரோக்கியமான பிரசவத்தை மேம்படுத்துவதே இதனுடைய நோக்கமாக இருக்கிறது.
WHO கூற்றின் படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 3 தத்தம் பெண்கள் பிரசவத்தின் போது இறந்து விடுகிறார்கள். 2மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்த முதல் மதத்திலே இறக்கிறார்கள். அதனால் இறப்பு விகிதங்களை குறைக்கும் வகையில் இந்த கருப்பொருள் இருக்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை பற்றி கற்பிக்க வேண்டும்.
மன ஆரோக்கியத்தை பற்றி யாரும் பேசுவதில்லை. அதனால் மன ஆரோக்கியத்தை பற்றி பேசுவதும் முக்கியமானது.
தாய்மார்கள் தங்களின் குழந்தை பெற்றெடுத்த பிறகும் பராமரிப்பது அவசியமானது.
உலக சுகாதார தினம் கருப்பொருள்கள்:
- 2024 – எனது ஆரோக்கியம், எனது உரிமை
- 2023- ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’
- 2022- ‘நமது கிரகம், நமது ஆரோக்கியம்’.
- 2021 – ஒரு நியாயமான, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குங்கள்
- 2020 – “செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கு ஆதரவு”
- 2019: யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ்: எல்லா இடங்களிலும்.
- 2018 – யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ்: அனைவருக்கும், எங்கும்
- 2017 – மனச்சோர்வு: பேசுவோம்
- 2016 – நீரிழிவு நோய்: தடுப்பை அளவிடுதல், பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துதல்
- 2015 – உணவு பாதுகாப்பு
- 2014 – வெக்டரால் பரவும் நோய்கள்
- 2013 – உயர் இரத்த அழுத்தம்: சைலண்ட் கில்லர், உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி
- 2012 – நல்ல ஆரோக்கியம் பல ஆண்டுகளாக வாழ்வை சேர்க்கிறது
- 2011 – ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு: இன்று நடவடிக்கை இல்லை, நாளை குணப்படுத்த முடியாது
- 2010 – நகரமயமாக்கல் மற்றும் ஆரோக்கியம்: நகரங்களை ஆரோக்கியமாக்குங்கள்
- 2009 – உயிர்களைக் காப்பாற்றுங்கள், அவசர காலங்களில் மருத்துவமனைகளைப் பாதுகாப்பானதாக்குங்கள்
- 2008 – காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்
- 2007 – அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.
- 2006 – ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்.
- 2005 – ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்த்து
- 2004 – சாலை வீதிப் பாதுகாப்பு
- 2003 – குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழ்லை நலம்பேணுவோம்.
- 2002 – நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
- 2001 – மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
- 2000 – பாதுகாப்பான குருதி என்னுடம் ஆரம்பிக்கட்டும்.
- 1999 – சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
- 1998 – பாதுகாப்பான தாய்மை
- 1997 – முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
- 1996 – தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
- 1995 – இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |









