World Lemur Day
நாம் நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்துவருகின்றமா என்றால் சந்தேகம் தான். அப்படி அதை கவனிக்காததால் நாம் பல இழப்புகளை சந்திக்கின்றோம். தண்ணீர் தொடங்கி விலங்குகள் வரை மனிதன் காட்டிய அலசியத்தால் இன்று அழிவை நோக்கி செல்கிறது. இப்படி அழிவை நோக்கி செல்லும் பல விஷயங்களை மக்களாகிய நமக்கு நினைவு குறைவே தினங்கள் கடைபிடிக்க படுகிறது. அப்படி அழிந்து வரும் ஒரு அரியவகை உயிரினம் தான் லெமூர் இனம். அழிவின் உச்சத்தில் இருக்கும் இதை பாதுகாக்க நம்மால் ஆன முயற்சிகளை எடுக்கவே இந்த உலக லெமூர் தினம் கடைபிடிக்க படுகிறது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. வாருங்கள் இன்று லெமூர் இனத்தினை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதை அழிவில் இருந்து காப்பாற்ற நம்மால் ஆன சிறு முயற்சிகளை எடுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உலக லெமூர் தினம் :
உலக லெமூர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் கடைசி வெள்ளி கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
2023-ம் ஆண்டிற்கான, உலக லெமூர் தினம் அக்டோபர் 27 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த லெமூர் குரங்கினத்தை அழிவிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
லெமூர் இனம் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
லெமூர் என்பது ஒரு வகையான குரங்கினமாகும். இவை ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் அதிக அளவில் வாழ்கின்றது.
லெமூர் உயிரினம் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கு போன்று காணப்படும்.
லெமுர் உயிரிகங்கள் முதனி என்னும் உயிரினத்தின் உட்பிரிவை சேர்ந்தது. லெமுர் மிகவும் பழமையான உயிரினமாக கருதப்படுகின்றது. அதாவது இந்த உயினத்தின் பரிமாணம் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லெமூர் அளவுகளும் நிறங்களும்:
லெமுர் பல அளவுகள் மற்றும் வண்ணங்களில் காணப்படுகிறது
இவை மிக சிறிய அளவில் இருந்து மிக பெரிய அளவுகள் வரை காணப்படுகிறது.
அதாவது 1.1-அவுன்ஸ் அளவுள்ள லெமுர் விலங்கினம், மவுஸ் லெமூர் என்றும்.
20-பவுண்டு எடையுள்ள மிகப்பெரிய லெமுர் இந்திரி அல்லது பாபகோடோ என்றும் அழைக்கப்படுகிறது. லெமுர் பல்வேறு வண்ணங்களில் காணப்படுகிறது. தற்போது உலக அளவில் 98% லெமுர் உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளது.
லெமூர் இனம் மற்ற உயிரினங்கள் போல் அல்லாமல் இந்த இனத்தை ஒரு பெண் லெமூர் வழிநடத்துகிறது.
மனிதனை தவிர நீலக் கண்கள் கொண்ட ஒரு பாலூட்டி இனம் லெமூர் இனமாகும். இவற்றின் கண்களின் நிறங்களும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு காணப்படும். நீலக் கண்களை உடைய லெமூர் உயிரினத்தை ஸ்க்லேட்டர்ஸ் லெமர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நீல கண்ணுடைய இந்த உயிரினம், IUCN அமைப்பின் ஆய்வுகளின் படி, அழிந்துவரும் உயிரினங்களுக்கான சிவப்பு பட்டியலில் இருக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |