World Tourism Day 2024 Theme in Tamil | உலக சுற்றுலா தினம் கருப்பொருள் 2024
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உலக சுற்றுலா தினம் எப்போது என்பதையும், உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் என்ன என்பதையும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். இவ்வுலகில் கொண்டாடப்படும் ஒவ்வொரு தினமும் ஒரு முக்கியத்துவத்தையும் கருப்பொருளையும் கொண்டுள்ளது. உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அத்தினத்தின் கருப்பொருள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துக்கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
உலக சுற்றுலா தினம் ஆனது, உலக சுற்றுலா நிறுவனத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1980 ஆமாம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுற்றுலா தினம் ஆனது, சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் எடுத்துக்காட்டவும், மக்களின் வாழ்க்கையில் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் சுற்றுலா எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுற்றுலா என்பதை வேறு எப்படியெல்லாம் கூறலாம்.?
உலக சுற்றுலா தினம் எப்போது.?
உலக சுற்றுலா தினம் ஆனது, ஆண்டுதோறும் செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. 1970 ஆம் ஆண்டில், UNWTO சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் 2024:
இந்த ஆண்டு 2024 உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் “Tourism and Peace” (சுற்றுலா மற்றும் அமைதி) ஆகும். அமைதியை ஊக்குவிப்பதில் சுற்றுலாவின் பங்கு முக்கியமானது ஆகும். சுற்றுலா மேற்கொள்வதன் மூலம், பல்வேறு கலாச்சாரங்களை பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், சுற்றுலா செல்வது, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலுக்கு வழி வகுக்கும்.உலக சுற்றுலா தினம் என்பது, சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், அதன் சமூகம், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பை எடுத்துரைக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு சர்வதேச கொண்டாட்டம் ஆகும்.
2024 ஆம் ஆண்டு, ஜார்ஜியா நாடு நடத்துகிறது. முதன் முதலில் உலக சுற்றுலா தினம் 1980 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் United Nations World Tourism Organization (UNWTO) சட்டங்களை ஏற்றுக்கொண்ட ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு, ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் தேதி உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |