World Water Day in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் என்பது அவசியமானதாக இருக்கிறது. நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் கூறினார். அதுபோல தான் இவ்வுலகில் நீர் இல்லாமல் வாழவே முடியாது. அதுபோல மனிதர்கள் விலங்குகள் மட்டுமின்றி செடி கொடிகளுக்கும் நீர் என்பது தேவையான ஒன்றாக இருக்கிறது.
ஆனால் நாம் வாழும் இந்த காலகட்டத்தில் நீரை கூட காசு கொடுத்து தான் வாங்குகிறோம். அப்படி ஒரு சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சரி இப்படி இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் நீருக்கு ஒரு தினம் இருக்கிறது. அதாவது உங்களுக்கு உலக தண்ணீர் தினம் எப்போது என்று தெரியுமா.? தெரியவில்லை என்றால், அதை பற்றி தெளிவாக நம் பதின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உலக தண்ணீர் தினம் எப்போது..?
இவ்வுலகில் நீர் இல்லாமல் யாராலும் வாழவே முடியாது. நீரின் முக்கியத்துவம் பற்றி நமக்கே தெரியும். ஆனாலும் நம் நாட்டில் பல இடங்களில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அதனால் தண்ணீரை வீணடிக்காமல், சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
இயற்கையின் வரப்பிரசாதமாக நமக்கு கிடைத்த நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கடந்த 1992-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளானது தண்ணீரின் சிறப்புகளைக் கூற மட்டுமல்லாமல், தண்ணீரின் அறியப்படாத உண்மைகள் மற்றும் தண்ணீரின் அவசியங்களை மக்களுக்கு உணர்த்துவதற்காக தான் கொண்டாடப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) மார்ச் 22 -ஐ உலக நீர் தினமாக நியமித்த பின்னர் 1993 இல் இது முதன் முதலில் அனுசரிக்கப்பட்டது.
- இந்த நாளானது சுத்தமான தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
- நன்னீர் வளங்களின் நிலையான மேலாண்மைக்கு வாதிடுவதற்கு இந்நாள் பயன்படுத்தப்படுகிறது.
- ஒவ்வொரு வருடத்தின் கருப்பொருளும் சுத்தமான நீர், சுகாதாரம் தொடர்பான தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது.
- உலக நீர் மேம்பாட்டு அறிக்கை (WWDR) ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.
உலக தண்ணீர் தினம் வரலாறு:
உலக தண்ணீர் தினம் முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் போது (UNCED) முன்மொழியப்பட்டது.
அதன் பிறகு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1993 இல் மார்ச் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்தது.
எனவே தண்ணீர் என்பது நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொள்ளுங்கள். அதனால் இனியாவது தண்ணீரை வீணடிக்காமல் சேமிக்க பழகுங்கள். ஆகையால் நீரின்றி அமையாது உலகு.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |