Yam Vegetable in Tamil
தமிழில் “கருணைகிழங்கு” என்றும் அழைக்கப்படும் “Elephant Yam”, தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை கிழங்கு ஆகும். இந்த கருணைகிழங்கு பெரிதும் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை நிலத்தடியில் வளர்வதால் ஊட்டச்சத்துக்கள் அதிகம். அந்த வகையில், நம் நாட்டில் அதிகம் உண்ணப்படும் கிழங்கான கருணைக்கிழங்குகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
யாம் கிழங்கை பற்றி உங்களுக்கு தெரியுமா….
யாம் பெயர்க்காரணம்:
வேர் காய்கறிகள் சில நேரங்களில் “யாம்ஸ்” என்று அழைக்கப்படுகின்றனர். அதில் இருந்து கருணைக்கிழங்கு என்று தமிழகத்தில் அழைக்கப்படும் கிழங்கிற்கு யாம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
இந்த கருணைக்கிழங்குகளை மக்கள் சூரன், ஜிமிகண்ட், யானைக்கால் யாம், யாம் மற்றும் ஓலே என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். இந்த கிழங்குகள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இந்த கிழங்கு ‘தொண்டை அரிப்பு’ தன்மையை கொண்டது.
இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளியன்று, லட்சுமி பூஜையிலும், உணவின் ஒரு பகுதியாகவும் பயன்படுத்துகின்றனர். இது பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய இந்திய சமையலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. யுனானி, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
சோளத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது..! இதையும் தெரிஞ்சுக்க வேணும்..!
யாம் கிழங்கின் சிறப்புகள்:
யாம் என்பது டியோஸ்கோரியா (குடும்பம் டயோஸ்கோரேசியே ) இனத்தில் உள்ள சில தாவர இனங்களுக்கு பொதுவான பெயர். யாம் கிழங்குகள் மிதமான மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் விளையக்கூடியது.
யாம் செடிகள் 15 மீ நீளம் மற்றும் 7.6 முதல் 15.2 செமீ உயரம் வரை வளரக்கூடியது. மண்ணில் யாம் கிழங்குகள் 1.5 மீ ஆழம் வரை வளரக்கூடியது.
இந்த இன கிழங்குகள் சில நச்சு தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. உண்ணக்கூடிய கிழங்கின் தோலை உரிப்பது கடினம், ஆனால் சமைப்பதன் மூலம் கிழங்கின் கடின தன்மை குறைந்து எளிதில் மென்மையாக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில், 75 மில்லியன் மெட்ரிக் டன்கள் அளவு யாம் கிழங்கு உலகளவில் உற்பத்தியாகியுள்ளது. உலகளவில் நைஜீரியாவில் 67% உற்பத்தியாகியுள்ளது.
வாட்டர் ஆப்பிள் என்றால் என்ன.?
யாம் கிழங்கில் உள்ள சத்துக்கள்:
யாம் கிழங்கு 100 கிராமுக்கு 118 கலோரிகளை கொண்டது. கிழங்கு வகைகள் மண்ணிற்கு அடியில் வளர்வதால் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துயுள்ளது.யாம் கிழங்கில் காணப்படும் சத்துக்கள் கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரைகள், நார்ச்சத்து உணவு, கொழுப்பு புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு மற்றும் தியாமின் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் யாம் கிழங்கில் உள்ளது.
யாம் கிழங்கின் நன்மைகள்:
யாமில் உள்ள உணவு நார்ச்சத்து, பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதாகக் கருதப்படுகிறது. மேலும், யாமில் உள்ள வைட்டமின் ஏ நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
யாம்களில் நார்ச்சத்து மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து நிறைந்துள்ளது, இது நமது இரைப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நல்ல குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது. அவற்றை உட்கொள்வது பசியைக் குறைக்கிறது, எனவே எடை இழப்புக்கு யாம் உதவுகிறது.
பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, பி6 போன்றவை உடலில் ஏற்படும் சுருக்கங்களைத் குறைக்கிறது.
யாம் கிழங்கு கீல்வாதம் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுகிறது.
கருணைக்கிழங்கில் எலும்பை பலப்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளன. பித்தத்தை குறைக்க, பசியின்மை தன்மை போக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
சிலர் செரிமான பிரச்சினைகளினால் அவதிப்படுவார்கள் அதனால் அவர்களால் அதிக அளவு உணவு சாப்பிட முடியாது எனவே இவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை கருணைக் கிழங்கை சாப்பிட்டால் அவர்களுக்கு செரிமான சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்
இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | success story |