யோகா நன்மைகள்
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயனளிக்கக்கூடிய யோகாசனத்தின்(Yoga Exercise) பலன்களை பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம். யோகாசனம் செய்வதால் நமது உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் உடல் எப்போதும் சோர்வு தன்மை இல்லாமல் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும். யோகா வகைகளில் எண்ணற்ற யோகாசனம் இருக்கிறது.
யோகாசனத்தை ஒரு நாள் மட்டும் செய்யாமல் தினமும் தவறாது பின்பற்றுதல் அவசியம். யோகா பயிற்சியை செய்வதால் உடல் ஃபிட்டாகவும், வயதானாலும் எளிமையான தோற்றத்தை அளிக்கும் ஆற்றல் யோகாசனத்திற்கு உள்ளது. சரி வாங்க இப்போது யோகா வகைகள் மற்றும் பயன்கள்(yoga benefits in tamil) பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
யோகா வகைகள் மற்றும் பயன்கள் – Types of Yoga in Tamil:
உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் | Utthita Hasta Padangusthasana Yoga:
yoga benefits in tamil: உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் செய்வதால் கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளை பலப்படுத்த செய்கிறது. இது கால்களின் பின்புறத்தையும் நீட்டி சம நிலையை மேம்படுத்துகிறது.
சசங்காசனம் | Sasakasana yoga:
கைகள், தோள்கள் மற்றும் மேல் முதுகில் நீட்டவும் பலப்படுத்தவும் சசகசனா உதவுகிறது. இந்த ஆசனத்தை வழக்கமாக செய்து வந்தால் பல முதுகெலும்பு சிக்கல்களைத் தணிக்க முடியும்.
ஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை |
சர்வங்காசனா யோகாசனம் / Sarvangasana Yoga:
yoga benefits in tamil: இந்த சர்வங்காசனா ஆசனம் செய்வதால் தைராய்டு பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். மேலும் இந்த ஆசனத்தினால் இதயத்திற்கு எந்தவித அழுத்தமும் இல்லாமல் மென்மையான இரத்த ஓட்டத்தை கொடுக்கிறது. இதனால் இதயத்தின் இரத்த ஓட்டமானது சரியான செயல்பாட்டுடன் இருக்கும். குறிப்பாக இதயத்தில் படபடப்பு தன்மை ஏற்படாமல் பாதுகாக்கும்.
விராபத்ராசனா யோகாசனம் / Virabhadrasana Yoga:
விராபத்ராசனா யோகாசனம் கவனம், சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. இந்த யோகாசனம் செய்வதால் உடலில் நல்ல சுழற்சி மற்றும் சுவாசத்தை ஊக்குவிக்க செய்யும். மேலும் இதன் விளைவாக உடல் முழுவதையும் உற்சாகபடுத்தும்.
மகரசனா யோகாசனம் / Makarasana Yoga:
மகரசனா யோகாசனம் ஆஸ்துமா, முழங்கால் வலி மற்றும் நுரையீரல் தொடர்பான அனைத்து வித பிரச்சினையையும் குணப்படுத்தும். இந்த ஆசனம் slip disc, spondylitis, and sciatica போன்ற உடலுறுப்புகளை குணப்படுத்த உதவுகிறது. இந்த மகரசனா ஆசனம் உடலை தளர்த்தி எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
உத்தன்படசனா யோகா / Uttanpadasana yoga:
இந்த உத்தன்படசனா ஆசனம் உடலில் உள்ள செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த யோகாசனம் செரிமான உறுப்புகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இந்த ஆசனத்தின் சிறப்பு கணையம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.
தடாசனா யோகா / Tadasana Yoga:
தடாசனா யோகா செய்வதால் தொடை, முழங்கால், கணுக்கால் பகுதிகளை பலப்படுத்துகிறது. அதோடு இடுப்பு, கால் பாதங்களுக்கு வலிமையை அதிகரித்து உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் இந்த தடாசனா ஆசனம்.
திரிகோனசனா யோகா / Trikonasana Yoga:
திரிகோனசனா யோகா உடலில் அஜீரண பகுதியை குணப்படுத்தும். குறிப்பாக இடுப்பு, தொடை பகுதிக்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது. இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் தொடைகளில் இருக்கும் கொழுப்புகளை நீக்கிவிடும். சிறுநீரக செயல்பாட்டை அதிகமாக தூண்ட செய்யும்.
கோமுகசனா யோகா / Gomukhasana Yoga:
கோமுகசனா ஆசனம் சிறுநீரக பகுதியை தூண்ட செய்யும். அதுமட்டும் இல்லாமல் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை நீக்கும் தன்மை இந்த கோமுகசனா ஆசனத்திற்கு உள்ளது.
பவனமுக்தாசனா யோகா / Pavanamuktasana Yoga:
பாவனமுக்தாசனா ஆசனம் செய்வதால் வயிற்று தசைகளை வலுப்படுத்தும். செரிமான பகுதிகள் மற்றும் குடல் உறுப்புகளை மசாஜ் செய்யும் ஆற்றல் வாய்ந்தது பாவனமுக்தாசனா. அதோடு வாய்வு பிரச்சனை இல்லாமல் செரிமான பகுதியை மேம்படுத்துகிறது.
சுகாஸனா யோகா / Sukhasana Yoga:
இந்த ஆசனம் காலர்போன்கள் மற்றும் மார்பு பகுதிகளை விரிவுபடுத்தக்கூடிய சிறந்த ஆசனம். முக்கியமாக இந்த சுகாஸனா யோகாசனம் மனதை அமைதி நிலைபடுத்தவும் மனதை மேம்படுத்தவும் செய்கிறது.
இந்த ஆசனம் செய்வதினால் மனதில் இருக்கக்கூடிய கவலைகள், மன அழுத்தம், உடல் சோர்வு பிரச்சனைகள் நீங்கும்.
ஷலபாசனா யோகா / Shalabhasana Yoga:
உடலில் இருக்கும் பின்புற தசைகளை வலுப்படுத்துவதில் மிகவும் சிறந்த யோகாசனம் இந்த ஷலபாசனா யோகாசனம். குறிப்பாக அதிகமாக முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஷலபாசனா ஆசனத்தை தினமும் பொறுமையாக செய்யலாம்.
பாலசனா யோகா / Balasana Yoga:
பாலசனா யோகா செய்வதால் இடுப்பு பகுதிகள், தொடை, கணுக்கால் தசைகளை நீட்டி பலப்படுத்தும் தன்மை இந்த பாலசனா யோகாவிற்கு இருக்கிறது. இந்த ஆசனம் செய்வதினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் மன அழுத்தம், உடல் சோர்வை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பாலசனா யோகாசனம்.
உஸ்ட்ராசனா யோகா / Ustrasana Yoga:
உஸ்ட்ராசனா யோகாவில் தொடைகளில் இருக்கும் கொழுப்புகளை குறைத்துவிடும். அதோடு இந்த ஆசனம் தோள்களை பலப்படுத்தும் சக்தியை பெற்றுள்ளது. உஸ்ட்ராசனா வயிற்றுப் பகுதியை விரிவுபடுத்துகிறது. அடுத்து முதுகில் ஏற்படும் வலியை குறைத்து, செரிமான பிரச்சனைகளை மேம்படுத்துகிறது.
கதிசக்ராசனா யோகா / Katichakrasana Yoga:
கதிசக்ராசனா யோகா பயிற்சி செய்வதால் உடலில் இருக்கும் மலச்சிக்கலை நீக்கும். அதுமட்டும் இல்லாமல் கதிசக்ராசனா யோகாவால் முதுகெலும்பு மற்றும் இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் சக்தியை பெற்றுள்ளது இந்த ஆசனம்.
இந்த யோகாசனம் செய்து வந்தால் கை, கால் தசைகள், கழுத்து பகுதிகள் நன்கு சீராக இருக்கும். இதனால் தோல்கள் வயிற்று தசைகளை பலப்படுத்தும்.
புஜங்கசனா யோகாசனம் / Bhujangasana Yoga:
புஜங்கசனா ஆசனம் செய்வதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யும் ஆற்றல் வாய்ந்தது. அதோடு மனநிலை பிரச்சனையை சரி செய்கிறது. இந்த ஆசனம் சிறுநீரகம், இதய உறுப்புகளை தூண்ட செய்கிறது.
பெண்கள் இந்த யோகாசனத்தை தினமும் செய்து வந்தால் உடலில் இருக்கும் மன அழுத்த பிரச்சனை குறைந்துவிடும். உடல் சோர்வுத்தன்மையை அகற்றி உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
கூர்மாசன யோகாசனம் / Kurmasana Yoga:
இந்த கூர்மாசன யோகாசனம் கால், முதுகு பகுதி, தோல் பகுதிகள், மற்றும் மார்பு தசைகளை நீட்டிக்க செய்கிறது. அடுத்து இந்த ஆசனம் சுவாச பிரச்சனை வராமலும் மற்றும் செரிமான பகுதிகளை சீராக வைத்திருக்க உதவுவதால் இந்த கூர்மாசனத்தை தினமும் செய்து வந்தால் உடல் வலிமையாக இருக்கும்.
சேட்டு பந்த சர்வாங்காசனம் / Setu Bandha Sarvangasana Yoga:
சேட்டு பந்த சர்வாங்காசனம் மார்பு பகுதி, கழுத்து, முதுகெலும்பு, மற்றும் இடுப்பு பகுதிகளை நீட்ட செய்கிறது. இந்த யோகாசனம் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும். அதுமட்டும் இல்லாமல் இந்த ஆசனத்தின் நன்மை முதுகு பின்புறம், உடல் பிட்டம் மற்றும் தொடை பகுதிகளை மேம்படுத்த இந்த ஆசனம் உதவுகிறது.
இந்த யோகாவின் மூலம் உடலில் சிலருக்கு தமனி அடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்தால் குணமாகும். அதோடு இதய பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த ஆசனம் சிறந்தது.
மத்ஸ்யாசன யோகா / Matsyasana Yoga:
மத்ஸ்யாசன யோகா செய்து வந்தால் சுவாச கோளாறு பிரச்சனை நீங்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த ஆசனம் பிட்யூட்டரி, பாராதைராய்டு, மற்றும் பினியல் சுரப்பிகளையும் சீராக வைத்திருக்க இந்த ஆசனம் மிகவும் உதவியாக உள்ளது.
இந்த மத்ஸ்யாசனம் கழுத்து பின்புறத்தில் இருக்கும் தசை பகுதிகளையும் வலிமையாக்குகிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |