உங்கள் போன் நிறத்தை வைத்து உங்களின் பண்புகளை தெரிந்துகொள்ளுவோமா !

Advertisement

போன் நிறமும் உங்கள் பண்பும்

ஒரு நபரின் ஆளுமைத் திறனை எதையெல்லாம் வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு பல அளவீடுகள் இருக்கின்றன. ஒரு நபரின் திறமையை அவரின் தோற்றத்தை வைத்து கணக்கிட கூடாது என்பர். இன்று உலக அளவில் கைரேகைகள் ஒருவரின் குண நலன்களை கண்டுபிடிக்க உதவுகின்றது என்று நம்புகின்றனர். உளவியல் ரீதியாக பல விதமான சோதனைகள் மூலம் ஒரு நபர் எப்படிபட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்களின் செயல்பாடுகளை உங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்து எளிதாக கண்டுபிடிக்க முடியும். நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உங்களின் தனித்தன்மையை கண்டறிய முடியும். அந்தவகையில் இன்று நீங்கள் அதிகம் பயன்படுத்தும் போன் அதன் நிறத்தை பொறுத்து உங்களின் குணத்தை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்….

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

உங்கள் போன் நிறமும் உங்களின் தனிபண்புகளும்: 

வெள்ளை:

நீங்கள் பயன்படுத்தும் போன் நிறம் வெண்மையாக இருந்தால் நீங்கள் எளிமையை விரும்புபவராக இருப்பீர்கள். நீங்கள் வெளிப்படை தன்மை கொண்டவராக காணப்படுவீர்கள்.

உங்கள் போன் நிறமும் உங்களின் தனிபண்புகளும்

தொலைபேசியின் நிறம் வெண்மையாக இருந்தால், நீங்கள் பெரும்பாலும் தூய்மை விருப்புவராக இருப்பீர்கள். உயர்ந்த தரத்தை விரும்பும் நபராக இருப்பீர்கள். ஒரு சில செயல்களில் நியாயமற்றவராகவும் காணப்படுவீர்கள்.

கருப்பு:

கறுப்பு நிறம் கொண்ட போன் பயன்படுத்துவோர் நுட்பம், தொழில்முறை, ஆற்றல் மற்றும் நேர்த்தி போன்ற பண்புகளைக் கொண்ட நபராக இருப்பார்.

போன் நிறமும் உங்கள் பண்பும்

பிளாக் போன்களை தேர்வு செய்பவர்கள் தங்கள் போன்கள் மூலம் தங்களை வெளிப்படுத்தும் ஆர்வம் இல்லாமல் இருப்பவராக இருப்பர். அவர்களைப் பொறுத்தவரை, தொலைபேசி என்பது பயன்பாட்டிற்கான ஒரு கருவி என்றே கருதுவர். கருப்பு தொலைபேசியைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் தனிமையை  விரும்புபவராக காணப்படலாம்.

Your Cell Phone Color Say About Your Personality in Tamil:

நீலம்:

phone color and personality

நீல நிற போன் பயன்படுத்துவோர் மிகவும் அமைதியானவராகவும் மற்றவரின் கவனத்தை ஈர்க்க விரும்பத்தவராகவும் இருப்பார்.

நீல நிறத்தை விரும்பும் நபர் ஆழமான சிந்தனை, அனைத்து செயல்களிலும் கவனமாக இருப்பது, செயல்படுவதற்கு முன் அதிகமாக சிந்திப்பது, திறமையான மற்றும் பழமைவாதம் கொண்டவராக இருப்பார்.

சிவப்பு:

phone color and personality in tamil

சிவப்பு நிறத்தை போன் நிறமாக கொண்ட நபர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவராக இருப்பார்கள். சிவப்பு நிறம் உடல் வலிமை, போட்டித்தன்மை, காதல் ஆகியவற்றின் நிறமாக கருதப்படுகிறது. சிவப்பு நிறத்தில் போன் பயன்படுத்துவோர் சிறந்த ஆளுமை கொண்டவர்களால் விரும்பப்படும் நிறமாக கருதப்படுகிறது.

தங்கம்:

phone color and person value

தங்க நிற ஃபோனைத் தேர்ந்தெடுப்பவர்கள் செல்வம், அந்தஸ்து மற்றும் ஆடம்பர பொருட்களை விரும்புவாராக இருக்கலாம்.

தங்க நிறத்தில் போன் பயன்படுத்துவோர் பொருளாதார ரீதியாக வெற்றியடைந்தவராக இருப்பார்.

தங்க நிற தொலைபேசிகளைக் கொண்டவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள அதிகம் தேடும் நபராக இருப்பார். மற்றவர்களுக்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் விருப்புபவராக இருப்பார்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil

 

 

Advertisement