zomato உருவான வெற்றிக் கதை

Advertisement

Zomato உருவான கதை 

நம் அனைவருக்கும் ஒரு சுய தொழில் வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும். எனக்கு நானே ராஜா நானே மந்திரி என்பது போல். ஆனால் அதற்கான முயற்சிகள் எந்த இடத்தில் தொடங்குவது, முதலீடு என்ன எப்படி பல புதிர்கள் இருக்கும். அவற்றை எல்லாம் ஆராய்ந்து கடந்து வந்தால் தான் உங்களால் புதிய முயற்சியை வெற்றிகரமாக முடிக்க முடியும்.

இங்கு தொழில்கள் மக்களின் தேவைகளில் இருந்து ஆரம்பிக்கிறது. அந்த தேவையை புரிந்துகொண்டால் கண்டிப்பாக நீங்களும் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகலாம். அப்படி மக்களின் தேவையை தனது தொழிலாக்கி, ஸிரோ முதலீட்டில் ஆரம்பித்து இன்று பல நூறு கோடி வருவாய் ஈட்டுகிறார் Zomato நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர். வாருங்கள் தீபிந்தர் Zomato உருவாக்க என்ன என்ன முயற்சிகளை எடுத்தார் என்று பார்ப்போம்.

Zomato Verrik Kathai in Tamil:

ஆரம்ப கால வாழ்கை:

தீபிந்தர் கோயல், பஞ்சாபில் உள்ள மக்ஸ்டர் எனும் சிற்றூரில் பிறந்த இவர், பள்ளியில் சராசரிக்கும் குறைவான மாணவராக இருந்துள்ளார். பள்ளிப்படிப்பில் மிகவும் கடினப்பட்டு படித்து தீபிந்தர் 2005 இல் ஐஐடி-டெல்லியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

அவர் சிறிய தேடலுக்குப் பிறகு, ஜனவரி 2006-ல் பெயின் அண்ட் கம்பெனியில் மூத்த அசோசியேட் ஆலோசகராக வேலைக்குச் சேர்ந்தார். பெய்னில் 4 ஆண்டுகள் பணிபுரிந்த அவர் நிறுவனத்திற்காக நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.

zomoto impressive story

ஒரு நாள் மதிய உணவு நேரத்தில் உணவை ஆர்டர் செய்ய, மெனுவைப் பார்க்க நிறைய ஊழியர்கள் வரிசையில் நிற்பதை பார்த்த அவர். அந்த செயல் ஒரு நபரின் நேரத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை உணர்ந்துள்ளார். அந்த நீண்ட வரிசையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​அவருக்கு ஏன் ​அந்த மெனு கார்டுகளை ஸ்கேன் செய்து கம்பெனி போர்ட்டலில் போடக்கூடாது என்று தோன்றியுள்ளது, ஊழியர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்களின் நேரங்கள் சேமிக்கப்படும் என்பதை கண்டுகொண்டார்.

இளம் தொழில்அதிபர் ரிதேஷ் அகர்வால் வெற்றிக்கு இதுதான் காரணமா…

அது வேலை செய்தது, நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அதை அதிகம் பயன்படுத்தினர். தான் அலுவலகத்தில் பிரச்சனையைத் தீர்க்க முடிந்தால், இதுபோன்று பொதுமக்களின் பிரச்சனையும் சரிசெய்ய முடியும் என்று அவருக்கு தோன்றியுள்ளது.

Foodiebay.com

2008 ஜூலை-ல் தீபேந்தர், தனது சக ஊழியர் பங்கஜ் உடன் சேர்ந்து  Foodiebay.com-ஐத் தொடங்கினார். இது டெல்லியில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து தங்களால் முடிந்தளவு மெனுக்களை சேகரித்து, அவற்றை Foodiebay.com -ல்  பதிவேற்றியுள்ளார். அதில் மெனுக்கள் மற்றும் உணவகங்களின் தொலைபேசி எண் மற்றும் இணைய முகவரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வேலையில் அவர்களது Foodiebay.com க்கு விளம்பரங்கள் மூலம் மட்டும் வருமானம் வந்தது. அதுமட்டும் அல்லாமல் அதிக பயனர்கள் பயன்படுத்துவதால் traffic, Foodiebay.com சேவையை பாதித்தது.

இறைச்சிகளை ஆன்லைனில் விற்பதில் முன்னணி நிறுவனமா?

இந்த சேவை டெல்லியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2009-ல் கொல்கத்தா,மும்பை மற்றும் பெங்களூரிலும் விரிவடைந்தது. 2010-ல் புனேவில் தொடங்கப்பட்ட்து.

foodiebay.com தளத்தை மேலும் மேம்படுத்த IIT-ல் தன்னோடு படித்த குஞ்சன் படிதாரைத் நாடினார். 24 × 7 வேலை செய்து தனது அலுவலகப்பணிகளுக்கு இடையே Foodiebay.com தளத்தை மேலும் மேம்படுத்தினார்கள். அது மட்டும் அல்லாமல் நகரங்களில் உள்ள அனைத்து உணவகங்களின் உள்ள உணவுகளின் விவரங்களை பெறுவதற்கு அவர்கள் அதிகம் பயணங்கள் மேற்கொள்ளவேண்டியிருந்தது.

zomoto success story in tamil

எப்படியோ நிறுவனம் தொடங்கி முதல் இரண்டு வருடங்கள் எந்த முதலீடும் இல்லாமல் தொழில்நுட்ப குழுக்களும் இல்லாமல் இணையதளத்தை நடத்திவந்தனர். அவர்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு நிதியின் தேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறத் தொடங்கியது.

அவர்களின் முதல் முதலீட்டரலாக ஆகஸ்ட் 2011 இல் Info Edge India, $1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் foodiebay.com நிறுவனத்தில் முதல் முதலீடு செய்தனர்.

Foodiebay.com என்ற பெயர் Zomatoவாக மாறியது: 

இது அவர்களுக்கு நம்பிக்கைக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. 2011, நவம்பரில் அவர்கள் Foodiebay.com என்ற பெயரை Zomato.com என மாற்றினர். ஏன்னென்றால், FoodieBay அதன் பெயரில் eBay இருப்பதால். சட்ட ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெயராக இதனை மாற்ற நினைத்தனர்.

zomoto success story

தீபிந்தர் பங்கஜுடன், பெயின் அண்ட் கம்பெனியில் உள்ள வேலையை விட்டுவிட்டு, தங்கள் முழு கவனத்தையும் Zomato பக்கம் திருப்ப முடிவு செய்தனர். இது தீபிந்தரின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அந்த சமயத்தில் Zomato வெற்றியடையும் என்று அவர்களது பெற்றோர் நம்பவில்லை.

Ola நிறுவனத்தின் வெற்றிக்கதை…

Zomato என்ற பெயர் மாற்றத்திற்கு பின் Zomato செயலி உருவானது, அதில் உணவகங்களின் விவரங்களை மெனுக்கள், தொடர்பு எண்கள், முகவரிகள், படங்கள் ஆகியவற்றையும் வழங்கியது. வாடிக்கையாளர்கள் உணவுகள் தொடர்பான  மதிப்புரைகளைச் சேர்க்கலாம் படிக்கலாம் போன்ற அம்சங்களும் கொண்டுவரப்பட்டது.

Zomato வளர்ச்சி 

2011-ல், இந்தியாவில்  டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூர், சென்னை, புனே, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் வரை விரிவடைந்தது.

2012 இல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, கத்தார், ஐக்கிய இராச்சியம், பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் சர்வதேச அளவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.

உணவகப் பட்டியலுக்கு அப்பால் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், Zomato 2015 இல் இந்தியாவில் அதன் உணவு விநியோக சேவையைத் தொடங்கியது.

zomato நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் Blinkit, Hyperpure ஆகும்.

2008 ல் இரண்டு நபர்கள் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இன்று அதாவது 2022ன் கணக்கின்படி இந்தியாவில் zomato வின் ஊழியர்கள் எண்ணிக்கை 3800 ஆகும்.

Zomato நிறுவனத்தின் நிகர லாபம் 971 கோடிகள் அதாவது அமெரிக்க டாலரில் 120 மில்லியன் ஆகும். ஆனால் இந்த நிறுவனம் 2008-ல் ஆரம்பிக்கும் போது ஸிரோ முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்றால் நம்பமுடியாது.

உங்களுக்கு தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தால் அதிக முதலீடு தேவையில்லாத புதிய முயற்சிகளை தொடங்குங்கள் அதற்கான வாய்ப்புகள் உருவாக்குங்கள்..

உங்களை சூழ்ந்துள்ள மக்களின் தேவைகளை ஆராயுங்கள், அதில் இருந்து உங்களுக்கான கனவு தொழில் கிடைக்கும்.

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story

 

Advertisement